உலகம்

பெனாசிர் கொலை வழக்கில் முஷரப் தேடப்படும் குற்றவாளி: பாக். நீதிமன்றம் அறிவிப்பு

rajakannan

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில், முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்பை தேடப்படும் குற்றவாளியாக அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு ராவல்பிண்டியில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் முஷரப் மீது 2013-ம் ஆண்டு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில், முஷ்ரப் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதோடு, அவரது சொத்துக்களையும் பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை கடந்த ஆண்டு நீக்கப்பட்ட பிறகு துபாய் சென்ற முஷரப் இன்னும் தாயகம் திரும்பவில்லை.

மேலும் இந்த வழக்கில் இரண்டு முன்னாள் மூத்த போலீஸ்சுக்கு தலா 17 ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் விதித்தது. 5 பேர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

2007 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் தேர்தல் பரப்புரையின்போது பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமர் பெனாசிர் பூட்டோ சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டுடன், மனிதவெடிகுண்டுத் தாக்குதலும் நடத்தப்பட்டதில் பெனாசிர் உள்பட மொத்தம் 24 பேர் கொல்லப்பட்டனர்.