உலகம்

இங்கிலாந்தில் 39 சடலங்களுடன் கன்டெய்னர் மீட்பு

இங்கிலாந்தில் 39 சடலங்களுடன் கன்டெய்னர் மீட்பு

jagadeesh

இங்கிலாந்தில் 39 சடலங்களை ஏற்றிச்சென்ற கன்டெய்னர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்ஸன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் ESSEX நகரில் உள்ள GRAYS தொழிற்பேட்டை பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த கன்டெய்னரில், 39 மனித சடலங்கள் கிடந்தது. 1 இளைஞர் மற்றும் 38 பேரின் சடலங்களை கன்டெய்னர் லாரியுடன் மீட்ட காவல்துறையனர், லாரியை ஒட்டி வந்த 25 வயதான இளைஞரையும் கைது செய்தனர். லாரி ஓட்டுநர் அயர்லாந்தை சேர்ந்தவர் என்பதும், அயர்லாந்திலிருந்து Holyhead பகுதி வழியாக கன்டெய்னர் லாரி இங்கிலாந்துக்குள் நுழைந்ததாகவும் ESSEX காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், இந்த 39 சடலங்களும் பல்கேரியாவில் இருந்து கன்டெய்னரில் வந்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், உள்துறை மூலம் ஒவ்வொரு தகவலையும் பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்த 39 பேர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் மீதே தமது எண்ணங்கள் இருப்பதாகவும் அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதனிடையே பல்கேரியாவிலிருந்து சடலங்களுடன் கன்டெய்னர் லாரி புறப்பட்டதாக கூறுவது உறுதிப்படுத்தப்படாத தகவல் என பல்கேரிய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.