திட்டமிட்டபடி வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தின்மூலம் ஷேக் ஹசீனாவை நாட்டை விட்டு வெளியேற்றியதாக, வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனஸ் கூறியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், வங்கதேச மாணவர்கள் சிலரை அறிமுகம் செய்துவைத்து பேசிய முகமது யூனஸ், “வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டத்திற்கு மூளையாக செயல்பட்டவர்கள் இவர்கள்தான்.
நாட்டில் நடந்த ஒட்டுமொத்த புரட்சிக்கும் இவர்கள்தான் காரணம். சாதாரண இளைஞர்கள் போல் இருக்கும் இவர்கள் களத்தில் இறங்கி குரல் கொடுத்தால் நாடே அதிரும். வங்கதேசத்தில் நடந்த நிகழ்வுகள் ஒரே நாளில் திடீரென நடந்தவை அல்ல... விரிவான திட்டத்துடன் நடத்தப்பட்டவை.
ஆட்சியில் இருந்தவர்களால் கூட இவர்களின் அடையாளத்தை கண்டறிய முடியாத அளவுக்கு அனைத்தும் முறையாக திட்டமிட்டு நடத்தப்பட்டது. திட்டமிட்டபடி வங்கதேசத்தில்
போராட்டம் மூலம் ஷேக் ஹசீனாவை
நாட்டை விட்டு வெளியேற வைத்தோம்” என்றார். அமெரிக்காவில், வங்கதேச போராட்டம் குறித்து முகமது யூனஸ் வெளிப்படையாக பேசி இருப்பது பேசுபொருளாகி உள்ளது.