உலகம்

நான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்!

நான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்!

webteam

வீட்டில் பொருத்தப்பட்ட கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் மர்ம நபர் பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஆஷ்லி லிமே. செவிலியரான இவர் அடிக்கடி இரவுப்பணிக்கு செல்ல நேர்வதால் தன்னுடைய 8 வயது மகளை கவனிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் மகளின் அறையில் பிரத்யேக கேமராவை பொருத்தினார். இந்த கேமரா மூலம் மகளின் செயல்பாடுகளை கண்காணிப்பது மட்டுமல்லாமல், அந்த கேமராவுடன் பொருத்தப்பட்ட ஸ்பீக்கர் மூலம் தகவல்களையும் பரிமாறலாம். 

(ஆஷ்லி லிமே)

இந்நிலையில் யாரோ ஒருவர் கேமரா வழியாக பேசுவதாக ஆஷ்லியின் மகள் தெரிவிக்க, ஆஷ்லி அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக பதிவான காட்சிகளை சோதனை செய்துள்ளார். அதில் ஒரு மர்ம நபரின் குரல் பேசுகிறது. அதில், நான் சாண்டா லாஸ். நான் உன்னுடைய நண்பன் என சொல்ல சிறுமி யார் நீ என திரும்பி கேட்கிறாள். அதற்கு நான் சாண்டா லாஸ். நீ என் தோழியாக இருக்க விருப்பமில்லையா என மீண்டும் அந்த மர்ம குரல் பேசுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆஷ்லி லிமே அறையில் பொருத்தப்பட்ட கேமராவை நீக்கியுள்ளார்.

இது குறித்து பேசிய ஆஷ்லி லிமே, மகளை கண்காணிக்க அறையில் கேமரா பொருத்தினேன். ஆனால் 4 நாட்கள் கூடாத ஆகாத நிலையில் அதன் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. அவர்கள் அந்த அறையில் நடப்பதை நிச்சயம் கேமரா வழியாக கண்காணித்து இருப்பார்கள். மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்பதற்காகவே இந்த தகவலை தெரிவித்தேன் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அந்த கேமரா நிறுவனம்,  வாடிக்கையாளர்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம். இந்த புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது