மாதிரி புகைப்படம் Freepik
உலகம்

அமெரிக்கா| பிறந்து 7 வாரமே ஆன குழந்தை... பசியால் அழுதபோது மதுவை ஊற்றிக்கொடுத்த தாய்!

அமெரிக்காவில், பிறந்து 7 வாரமே ஆன குழந்தை பசியால் அழுதபோது, பெற்ற தாயே மதுவை ஊற்றிக் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Prakash J

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் ரியால்டோ நகரைச் சேர்ந்தவர் ஹானஸ்டி டி லா டொர்ரே. 37 வயதான இந்தப் பெண்ணிற்கு கடந்த ஜூன் மாத இறுதியில் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த 7 வாரமே ஆன தன்னுடைய குழந்தையுடன், காரில் பயணம் செய்துள்ளார். அப்போது குழந்தை பசியால் அழுதுள்ளது. இதையடுத்து, குழந்தையின் பசியைப் போக்குவதற்கு தாய்ப்பால் கொடுக்காமல், அதற்குப் பதில் பால் டப்பாவில் தன்னிடம் இருந்த மதுவை ஊற்றிக் கொடுத்துள்ளார்.

இதையும் படிக்க: ”இந்த வழி எங்கே இருக்கிறது” - இளைஞர்களிடம் வழிகேட்ட தோனி! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

மாதிரி புகைப்படம்

பசியில் மதுவைக் குடித்த குழந்தை போதையில் மயங்கியுள்ளது. வழியில் அந்தப் பெண்ணின் காரை மடக்கிப் பிடித்த போலீசார் விசாரித்துள்ளனர். அதில் குழந்தைமீது மதுவாடை வந்ததால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. மருத்துவமனையில் குழந்தை மதுபோதையில் இருந்ததைப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

விசாரணையில் குழந்தையின் அழுகையை நிறுத்த மதுவை பால் டப்பாவில் ஊற்றிக் கொடுத்ததை அந்த பெண் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்தப் பெண்ணை கைது செய்தனர். தற்போது விசாரணையில் இருக்கும் ஹானஸ்டி, பிணையத் தொகை ரூ.50 லட்சத்தை நீதிமன்றத்தில் செலுத்தி உள்ளார். குழந்தைக்கு மது கொடுத்த அந்தப் பெண் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க; கொலம்பியா| பல் பிடுங்கியதால் ரத்தக்கசிவு... சிறுமிக்கு நேர்ந்த துயரம்!