உலகம்

“எங்கள் அனுமதியில்லாமல் குழந்தையை தொடக்கூடாது”.. கண்டிஷன் போட்ட மருமகள் கலங்கிய மாமியார்!

JananiGovindhan

வீட்டில் புதிதாக குழந்தை பிறந்தால் அந்த குழந்தையை பெற்றவர்களை காட்டிலும் உடன் இருக்கும் தாத்தா பாட்டிகளே மிகவும் கவனமாகவும் கனிவாகவும் பராமரிப்பார்கள். ஆனால், பெண் ஒருவர் தனக்கு பிறந்த ஆண் குழந்தையை மாமியார் தொடக்கூடாது எனச் சொல்லியிருக்கிறார்.

இப்படியெல்லாம் நடக்குமா என இதனை அறிந்த பிறகு நம்புவது கடினமாகத்தான் இருக்கும். ஆனால் இதுதான் உண்மை. பெற்றோர்களுக்கான மம்ஸ்நெட் என்ற தளத்தில் பெண் ஒருவர் பகிர்ந்துள்ள பதிவால் நெட்டிசன்கள் பலரும் குழம்பி போயிருக்கிறார்கள்.

அதன்படி, “நானும் என் கணவரும் மட்டுமே எங்கள் குழந்தையின் டயப்பரை மாற்ற வேண்டும். எங்கள் குழந்தையின் தனியுரிமையில் எந்த சமரசமும் செய்துக்கொள்ள போவதில்லை. என் மகனை தொட வேண்டுமென்றால் எங்கள் சம்மதம் முக்கியம்.

ஒருவேளையில் எங்களால் பார்த்துக்கொள்ள முடியாமல் போனால் பரவாயில்லை. அப்போது எந்த பிரச்னையும் இருக்காது. ஆனால் தற்போது அப்படியில்லை அல்லவா? ஒருநாள் மகன் அழுத போது என்னுடைய மாமியார் அவனை தூக்கி பின்னால் தட்டிக் கொடுத்துவிட்டு சென்றார். ஆனாலும் டயப்பர் மாற்றிய போது குழந்தை அழுதுக்கொண்டே இருந்தான். இது எனக்கு சங்கடமாக இருந்தது.

ஆகையால் இது குறித்து மாமியாரிடம் எதுவும் சொல்லாமல், மகனை கவனிப்பதற்காக சில விதிகளையும், எல்லைகளையும் வகுத்தேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த பதிவைக் கண்ட பிற தாய்மார்கள், அந்த பெண்ணை வறுத்தெடுத்திருக்கிறார்கள். அதாவதும் குழந்தையை கவனித்துக்கொள்வதில் விழிப்போடு இருப்பதில் தவறில்லை. ஆனால் இப்படியெல்லாம் செய்வது சித்தபிரமை பிடித்ததை போலதான் சொல்வார்கள் என கடுமையாக சாடியிருக்கிறார்கள். கடந்த 2022ம் ஆண்டு பகிரப்பட்ட இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.