உலகம்

மூளை தொடர்பான நோய்களை கண்டறிய புதிய ஸ்கேனர்

மூளை தொடர்பான நோய்களை கண்டறிய புதிய ஸ்கேனர்

webteam

மனிதனின் நினைவுகள், எண்ணங்கள், உணர்வுகள் என அனைத்திற்கும் மூல காரணம் மூளைதான். மூளையில் ஏற்படும் நோய்களை தெளிவாக அறிந்து கொள்ள மூளை ஸ்கேனர் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள், செல்கள் மூளையில் உள்ளன. இதில் உள்ள ஒவ்வொரு செல்களிலும் 1000 கோடி நியூட்ரான்கள், நரம்பு செல்கள் உள்ளன. மூளையின் அளவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் தொடர்பு இல்லை என்பது ஆய்வாளர்களின் கருத்து. மூளையின் அடர்த்தி, அதில் உள்ள மடிப்புகள், பாலம் பாலமாக கசங்கி போய் இருப்பதுதான் புத்திசாலித்தனத்தை தீர்மானிக்கிறது என்கின்றனர் மூளை ஆராய்ச்சியாளர்கள். சிந்தனை, கற்பனை சம்பந்தப்பட்ட அனைத்தும், மூளையின் ‘கார்டெக்ஸ்’ எனும் பகுதிகளில்தான் நிகழ்கிறது.

விண்வெளி தொடர்பான ஆய்வுகளை வெறும் பைனாகுலர் வைத்து ஆய்வு செய்த காலங்கள் மறைந்து ஹப்பில் தொலைநோக்கி கிடைத்தது போலதான் மருத்துவ துறைக்கு இந்த அறிய கருவி கிடைத்துள்ளது என்கின்றனர் இதனை கண்டுபிடித்த பிரிட்டினைச் சேர்ந்த கார்டிஃப் பல்கலைக்கழக மூளை நிபுணர்கள்.  

இதுகுறித்து கார்டிஃப் பல்கலைக்கழக பேராசிரியர் டெரெக் ஜோன்ஸ் கூறுகையில், எம்ஆர்ஐயில் 22 ஆண்டு ஆய்வியின் வெற்றியாக கிடைத்ததுதான் இந்த ஸ்கேனர். பாதிக்கப்பட்ட மூளையின் வலை அமைப்பின் அடர்த்திகளை நுண்ணியமாக காட்டுகிறது. இதன்மூலம் மூளையில் ஏற்படும் டிமென்ஷியா, ஸ்கிசோஃப்ரினியா மற்றும் மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் போன்ற நரம்பியல் மற்றும் மூளை சார்ந்த மனநிலை காரணங்கள் போன்றவற்றை ஆராய உதவுகிறது என்கின்றனர் மூளை நிபுணர்கள். மூளையின் நரம்பு மண்டல குறைபாடுகளை மேலும் அதிகமாக புரிந்துகொண்டு, அறுவைச் சிகிச்சைகள் இல்லாமலேயே அவற்றை குணமாக்க இவை மருத்துவர்களுக்கு உதவலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மூளையில் ஏற்படும் புற்றுநோய் தொற்றுகள், மூளைக் கட்டிகள் போன்றவற்றை இந்த ஸ்கேனர் மூலம் மூளையை தொடாமலே சிகிச்சை செய்ய முடியும். மூளையின் பக்கங்களை சிவப்பு, பச்சை என பாதிக்கப்பட்ட பகுதிகளை வெவ்வேறு வண்ணங்களில் முப்பரிமாண வடிவங்களில் தெளிவுப்படுத்திக் காட்டுகிறது. மூளையின் உட்செயற்பாட்டை மிகவும் விவரமாக படம்பிடித்துக்காட்ட இந்த புதிய ஸ்கேனர் மருத்துவத்துறையின் புதிய மைல்கல் என்றே கூறலாம்.