அமெரிக்கா புதிய தலைமுறை
உலகம்

அமெரிக்கா | 100 ஆண்டுகளில் இல்லாத அழிவு..? கரையை கடக்கத் தொடங்கியது மில்டன் புயல்!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை மில்டன் புயல் கடக்கத் தொடங்கியுள்ளது.

PT WEB

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை மில்டன் புயல் கடக்கத் தொடங்கியுள்ளது.

5 ஆம் வகை புயலாக கணிக்கப்பட்ட மில்டன் 3ஆவது வகையாக வலுவிழந்து கரையை கடந்து வருகிறது. TEMPA BAY பகுதியில் புயல் கரையை கடக்கும் போது அதிகபட்சமாக 270 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே புளோரிடாவின் பல பகுதிகளில் காற்றின் கோரத்தாண்டவத்திற்கு இரையாகியுள்ளன.

பல வீடுகளின் மேற்கூரைகள் இடிந்து விழுந்துள்ளன. முன்னெச்சரிக்கையாக லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 25 சென்டிமீட்டர் அளவிற்கு மழை பெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மில்டன் புயலால் பாதிப்பு ஏற்படலாம் என வானிலை ஆய்வாளர் எச்சரித்துள்ளனர். அதனை சமாளிப்பதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.