பிரபலங்களை போன்ற தோற்றத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக பலரும் அவர்களை போலவே நடை உடை பாவனைகளை மாற்றி வலம் வருவது அவ்வப்போது நிகழ்வதுதான்.
அதுபோல, அமெரிக்காவின் ரியாலிட்டி ஷோ ஸ்டாராக இருக்கும் கிம் கர்தாஷியனை போலவே இருக்க வேண்டும் என்பதற்காக மாடல் அலகி ஒருவர் 4 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவழித்து அறுவை சிகிச்சை செய்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால், இப்படி செய்தது அவருக்கு ஒத்து வராததால் தற்போது தன்னுடைய பழைய உருவத்தையே பெறுவதற்காக 95 லட்சம் ரூபாய் செலவழித்துக் கொண்டிருக்கிறார்.
பிரேசிலைச் சேர்ந்த 29 வயதுடைய ஜெனிஃபர் பாம்பலோனா என்ற மாடல் அழகி ஒருவர் கிம் கர்தாஷியன் உருவ அமைப்பை பெறுவதற்காக கடந்த 12 ஆண்டுகளில் 40 காஸ்மெடிக் அறுவை சிகிச்சைகளை செய்திருக்கிறார் என நியூயார்க் டைம்ஸ் இதழ் குறிப்பிட்டிருக்கிறது.
“பலரும் என்னை கர்தாஷியனை போல இருப்பதாகவே அழைப்பார்கள். அது முதலில் எனக்கு எரிச்சலை கொடுத்தது. நான் படித்து, பணியாற்றி ஒரு நல்ல தொழிலதிபராக இருந்தேன். ஆனால் என்னுடைய உடலமைப்பு கர்தாஷியனை போலவே இருந்ததாலே மட்டுமே நான் அங்கீகரிக்கப்பட்டேன்” என ஜெனிஃபர் கூறியிருக்கிறார்.
தனது 17வது வயதில் ஜெனிஃபர் முதல் முதலில் காஸ்மெடிக் அறுவை சிகிச்சை செய்யத் தொடங்கியிருக்கிறார். மூட்டு அறுவை சிகிச்சைக்கான மூன்று ரைனோபிளாஸ்டிஸ், கொழுப்புக்கான ஊசிகள், பிட்டம் உள்ளிட்டவற்றின் அளவை கூட்டுவதற்கு எட்டு அறுவை சிகிச்சைகள் என பலவும் அந்த 40 அறுவை சிகிச்சைகளில் அடங்கும்.
இதனால் ஜெனிஃபர் பாம்பலோனா பெருமளவில் பிரபலமானார். சர்வதேச அளவில் அவருக்கு அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது. இதற்காக கிம் கர்தாஷியனுக்கு நன்றியும் கூறியிருக்கிறார்.
ஆனால் ஒரு கட்டத்தில் தான் அறுவை சிகிச்சைகளுக்கு அடிமையானதை உணர்ந்து, தான் மகிழ்ச்சியாக இல்லை என்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறார். இதனால் கடுமையான நாட்களை சந்திப்பதாகவும், மீண்டும் இயற்கையான எனது தோற்றத்தை பெற நினைக்கிறேன் எனவும் ஜெனிஃபர் தெரிவித்திருக்கிறார்.
அதற்காக இஸ்தான்புலில் உள்ள ஒரு மருத்துவரை அனுகியிருக்கிறார். அந்த மருத்துவர், தன்னை இயல்பு நிலைக்கு மாற்றிவிடுவதாக ஜெனிஃபருக்கு உத்தரவாதமும் அளித்திருக்கிறாராம்.
இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானா ஃபாலோயர்ஸ்களை பெற்றிருக்கும் ஜெனிஃபர் தற்போது காஸ்மெடிக் சர்ஜரி எந்த அளவுக்கு ஆபத்தானது என்பதை உணர்த்தும் ஆவணப்படத்தில் நடித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.