உலகம்

'முறையான மேலாடை அணியுங்கள்!' - ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட முன்னாள் மிஸ் யூனிவர்ஸ்

'முறையான மேலாடை அணியுங்கள்!' - ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட முன்னாள் மிஸ் யூனிவர்ஸ்

கலிலுல்லா

முன்னாள் மிஸ் யூனிவர்ஸ் அழகி ஒருவர் அமெரிக்க ஏர்லைன்ஸில் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு முறையான மேலாடை அணியும்படி வலியுறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் பட்டம் பெற்றவர் ஒலிவியா கல்போ. அவர் நேற்று, சான் லூகாஸுக்குச் செல்ல அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறியுள்ளார். அவருடன் அவரது சகோதரி மற்றும் ஆண் நண்பர் ஆகியோர் இருந்துள்ளனர். அப்போது அவர் தனிமைபடுத்தப்பட்டு, முறையான மேலாடைகளை அணிய வலியுறுத்தப்பட்டார் என்று அவரது சகோதரி அரோரா தெரிவித்துள்ளார். 29 வயதான ஒலிவியா மேலாடையை முறையாக அணியுமாறு கூறி விமானத்தில் வாயிலில் அழைக்கப்பட்டார்.

முன்னாள் மிஸ் யுனிவர்ஸ், ஸ்போர்ட்ஸ் ப்ரா மற்றும் பைக்கர் ஷார்ட்ஸ் அணிந்திருந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. இது குறித்து அவரது சகோதரி இதில் எந்த தவறோ, குற்றமோ இல்லை என்று கூறியுள்ளார். இதை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதையடுத்து, இந்த சம்பவம் வைரலாகியது. தனது இன்ஸ்டாகிராம் கணக்கில், இதை மேற்கொள்காட்டிய ஒலிவியா, "விட்டுவிடு அரோரா'' என பதிவிட்டுள்ளார்.

அமெரிக்கன் ஏர்லைன்ஸின் இணையதளத்தில், பயணிகள் "பொருத்தமான ஆடைகளை" அணிய வேண்டும் என்றும் "அபாண்டமான ஆடைகளை" அணியக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இறுதியில் ஒலிவியா கல்போ தன் ஆண் நண்பரின் மேல் மேல்சட்டையை அணிந்த பின் விமானத்துக்குள் அனுமதிக்கப்பட்டார்.