உலகம்

மாயமான மலேசிய விமானம்: கிடப்பில் போடப்பட்ட தேடும் பணி

webteam

மாயமான மலேசிய விமானத்தை மீண்டும் தேடுவது தொடர்பாக இதுவரை எந்த முடிவுக்கும் வரவில்லை என மலேசிய ‌அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு 239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்ற மலேசிய விமானம் ஒன்று, இந்திய பெருங்கடல் பகுதியில் காணாமல் போனது. பல நாடுகள் சேர்ந்து விமானத்தின் பாகங்களைக் கடலில் தேடி வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் தேடும் பணி நிறுத்திக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் கோலாலம்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள மலேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் லீவோ தியோ‌ங் லை, மாயமான எம்ஹெச் 370 மலேசிய விமானத்தை தேட மூன்று நிறுவனங்களிடம் இருந்து வரைவுத்திட்டங்களை பெற்றுள்ளதாகவும் கூறினார். ஆனால் விமானத்தை தேடுவது குறித்து இதுவரை எந்த முடிவுக்கும் வரவில்லை என்று அவர் தெரிவித்தார். சீனா, ‌ஆஸ்திரேலிய நாடுகள் பங்குபெறும் முத்தரப்பு குழு கூட்டத்துக்குப் பின், இது பற்றி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.