உலகம்

ஈராக்கில் 43 ஆண்டுகள் கழித்து அழகிப்போட்டி

ஈராக்கில் 43 ஆண்டுகள் கழித்து அழகிப்போட்டி

webteam

ஈராக்கில் 43 ஆண்டுகளுக்கு பின்னர் நடத்தப்பட்ட அழகிப் போட்டியில் மிஸ் ஈராக்காக தேர்வு செய்யப்பட்ட ஷைமா குவாசிம், முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயை ஒருமுறையாவது சந்திக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ஈராக்கில், 43 ஆண்டுகளுக்குப் பின்னர் அழகிப் போட்டி நடத்தப்பட்டது. போரினால் நிம்மதி இழந்து தவித்த மக்களுக்கு இந்த நிகழ்ச்சி சற்று ஆறுதலைத் தந்துள்ளது. ஈராக்கில் கடந்த 1972ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக அழகிப் போட்டி நடத்தப்பட்டிருக்கிறது.

இதில் ஷைமா குவாசிம் அப்துல் ரஹ்மான் என்ற 20 வயது பெண் மிஸ் ஈராக்- ஆக தேர்வு செய்யப்பட்டார். இளங்கலை தொழிற்படிப்பு பயின்ற அவர், சர்வதேச அரங்கில் ஜொலிக்கத் தொடங்கியுள்ளார். முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என ஷைமா குவாசிம் தெரிவித்துள்ளார்.