உலகம்

ரோஹிங்ய மக்களை கொல்ல கண்ணிவெடி: அம்பலப்படுத்திய பிபிசி

ரோஹிங்ய மக்களை கொல்ல கண்ணிவெடி: அம்பலப்படுத்திய பிபிசி

webteam

மியான்மரில் இருந்து தப்பி வரும்போது நிலக் கண்ணிவெடியில் சிக்கி குழந்தைகளும், பெண்களும் தங்களது கால்களை இழந்து வருவதாக பிபிசி நிறுவனம் செய்தி வெளிய‌ட்டுள்ளது.

பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில், ராகினே மாகாணத்தில் இருந்து வங்கதேசத்துக்கு தப்பி வரும் சமயத்தில் மியான்மர் அரசு புதைத்து வைத்திருந்த நிலக் கண்ணிவெடியில் சிக்கியதாக ரோஹிங்ய மக்கள் தெரிவித்துள்ளனர். உயிருக்கு பயந்து சொந்த நாட்டை விட்டு தப்பி வரும் வேளையிலும், விடாமல் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக அவர்கள் மிரட்சியுடன் கூறியுள்ளனர்.

இதனிடையே ரோஹிங்ய இன மக்களை கொல்ல வேண்டும் என்பதற்காக, அவர்கள் தப்பிச் செல்லும் வழியில் மியான்மர் ராணுவம் வேண்டுமென்றே நிலக் கண்ணி வெடிகளை புதைத்து வைத்திருப்பதாக வங்கதேச அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதே போல் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிராக நடந்து வரும் வன்முறை சம்பவங்களுக்கு அமெரிக்காவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு செய்திதொடர்பாளர் சாரா ஹக்காபீ சான்டர்ஸ், ’மியான்மரில் தற்போது நடந்து வரும் உள்நாட்டுப் பிரச்னை மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. ‌கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நிகழ்ந்து வரும் வன்முறை சம்பவங்களால் இதுவரை மூன்று லட்சம் பேர் வங்கதேசத்துக்கு அகதிகளாக புலம் பெயர்ந்திருப்பதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் கண்டனத்துக்குரியது" என்று தெரிவித்தார்.