உலகம்

பிலிப்பைன்ஸில் 85 பேருடன் சென்ற ராணுவ விமானம் விழுந்து விபத்து

jagadeesh

பிலிப்பைன்ஸ் நாட்டில் 85 பேருடன் சென்ற ராணுவ விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதற்கு 85 பேருடன் ராணுவ விமானம் புறப்பட்டது. சுலு எனும் இடத்தில் தரையிறங்க முற்பட்ட போது விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் பலரும் இறந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

விமான விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் இப்போது நடைபெற்று வருகிறது. எனினும் இந்த கோர விபத்தில் எத்தனைப் போர் உயிரிழந்தார்கள் என்ற விவரங்கள் தெரியவில்லை.