மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தோற்றுவித்த பால் ஆலன் சேகரித்த அறிவியல் பொக்கிஷங்கள் ஏலத்திற்கு விடப்படுகின்றன.
மறைந்த பால் ஆலனின் எஸ்டேட்டிலிருந்து அறிவியல் வரலாற்று பொக்கிஷங்கள் மற்றும் விண்வெளி உடைகள், வரலாற்று கம்ப்யூட்டர்கள் போன்ற பல பொருட்கள் ஏலத்திற்கு வருகின்றன. இந்த ஏலமானது நேற்று முதல் மூன்று நாட்களுக்கு நடத்தவிருக்கிறது. அறிவியல் ஆய்வாளர்களுக்கும், வரலாற்று பொக்கிஷங்கள் விரும்புபவர்களுக்கும் இந்த ஏலமானது விலைமதிப்பற்றது.
ஏலத்தில் முக்கியமாக இருப்பது
இந்த ஏலத்தில் இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1939 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியான பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்டை எச்சரிக்கும் கடிதம்,
மற்றும், நாசாவின் ஜெமினி IV பணியின் போது விண்வெளியில் 'நடந்த' முதல் விண்வெளி வீரரின் ஸ்பேஸ்சூட், டியான் ஃபோஸி மற்றும் லூயிஸ் லீக்கி ஆகியோரின் கடிதப் போக்குவரத்து போன்றவைகள் ஆலன் தனது வாழ்நாளில் சேகரித்தார்.
2018 இல் அவர் இறக்கும் போது, ஆலனின் நிகர மதிப்பு US$20 பில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது,
பால் ஆலன்
அவர் முதன்முதலில் தனிநபர் கணினிகளுக்கான மென்பொருளை உருவாக்கினார். அதன்பிறகு 1975 இல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பில் கேட்ஸுடன் இணைந்து நிறுவினார். அதன்பிறகு மைக்ரோசாப்டை விட்டு வெளியேறிய ஆலன் மூளை அறிவியல் , செயற்கை நுண்ணறிவு மற்றும் செல் அறிவியலுக்கான ஆலன் நிறுவனங்களை நிறுவியதுடன் இருந்துவிடாமல், SpaceShipOne மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச்செல்லும் நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டார். இவர் தனது வாழ்நாளில் சேகரித்து வைத்திருந்த பொக்கிஷங்களை மைக்ரோசாப்ட் நிறுவனமானது தற்பொழுது ஏலத்திற்கு விட தீர்மானித்து இருக்கிறது
எனிக்மா மிஷின்
1941 இல் செயல்பட்ட எனிக்மா மிஷின். இரண்டாம் உலகப் போரின் போது, நாஜிக்கள் எனிக்மா மிஷின்களைப் பயன்படுத்தி, உயர்-ரகசிய இராணுவத் திட்டங்களை குறியாக்கம் செய்தனர். பிரிட்டிஷ் கணிதவியலாளர் ஆலன் டூரிங், மற்ற குறியீடு பிரேக்கர்களுடன் சேர்ந்து, கணிதம் மற்றும் தர்க்கத்தைப் பயன்படுத்தி சைபர்களை சிதைப்பதற்கான ஒரு அமைப்பைக் கொண்டு வந்தார். அந்த எனிக்மா மிஷினானது ஏலத்திற்கு வரவிருக்கிறது.
லூயிஸ் லீக்கி, ஜேன் குடால் மற்றும் டியான் ஃபோஸி ஆகியோரின் கடிதம்
சிம்பன்சிகள் மற்றும் கொரில்லாக்களைப் பற்றிய ஆராய்ச்சிக்காக குடால் மற்றும் ஃபோஸியை லீக்கி ஆகியோர் ஆப்பிரிக்க காடுகளுக்கு சென்றனர் அவர்கள் அங்கு தங்கி தாங்கள் ஆராய்ச்சி செய்த கடிதங்கள் மற்றும் புகைப்படங்கள், இதுவும் ஏலத்திற்கு வரவுள்ளது.
விண்வெளி வீரர் எட் ஒயிட்டின் பேக்-அப் ஸ்பேஸ்சூட்
1965 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஸ்பேஸ்சூட் இது குறைந்த பட்ச மதிப்பான $120,000 என்ற மதிப்பீட்டை விட அதிக விலைக்கு போகலாம் என்று கூறுகிறார்.
1976ல் உருவாக்கிய ஆப்பிள் I கணினி...
இந்த கணினி ஏலத்தில் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த ஏலத்தை காணக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
அப்பல்லோ 8 ல் இருந்து விண்வெளி வீரர் ஜேம்ஸ் லவ்லின் கையால் எழுதப்பட்ட பதிவு புத்தகம்
ஜேம்ஸ் லவ்லி என்பவர் நாசாவின் அப்பல்லோ 8 என்ற சந்திரனைச் சுற்றி பறந்த முதல் குழுவில் இணைந்திருந்தார். 1968ல் அப்பல்லோ விண்வெளிக்கு சென்ற சமயம் பூமியை ஒரு கிரகமாகவும் சந்திரனை அருகில் பார்த்த தனது அனுபவத்தை தனது கையால் எழுதியிருந்தார். இந்த புத்தகமானது ஏலத்திற்கு வரவுள்ளது.
இதைத்தவிர, ஆலன்ஸ்க்கு வரலாற்று பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் இருந்துள்ளது. ஆகவே அவரது வீட்டில் சுமார் 80 % நன்கொடையாக பெறப்பட்ட அரிய பொருட்கள், மற்றும் அவர் சேகரித்த பொக்கிஷங்கள் அனைத்தும் ஏலத்திற்கு விடப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆலனின் மதிப்புமிக்க உடைமைகள் தனிப்பட்ட அல்லது அருங்காட்சியக சேகரிப்பு போன்றவை ஏலம் விடப்படுவதாக கூறப்படுகிறது. இந்த ஏலம் மூன்று பகுதிகளாக நடைபெறும் ; முதல் இரண்டு ஏலமானது நேற்று தொடங்கி செப்டம்பர் 12 அன்று முடிவடையும். மூன்றாவது ஏலமானது செப்டம்பர் 10 ஆம் தேதி நியூயார்க் நகரத்தில் உள்ள கிறிஸ்டியின் ஏல இல்லத்தில் நேரலையாக நடக்க இருப்பதாக பிரபல நாளேட்டில் தெரிவிக்கப்படுள்ளது.