தென்மேற்கு சீனாவில் இருக்கும் மூன்று மாகாணங்களை இணைக்கும் வகையில் 50 மாடி கட்டட உயரத்தில் பிரமாண்ட பாலம் கட்டப்பட்டு வருகிறது.
ஜிமிங்சான்ஷெங் என பெயரிடப்பட்டுள்ள அந்த மேம்பாலம், 50 மாடி கட்டடம் அளவுக்கு உயரம் கொண்டது. சுண்ணாம்புக்கற்கள், கரடு முரடான நிலப்பகுதி ஆகிய காரணங்களால் மேம்பாலம் கட்டும்போது மிகுந்த அவதிக்கு ஆளாவதாக பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர். 2016ம் ஆண்டு, தொடங்கப்பட்ட இந்தப் மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் ஏறக்குறைய முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த ஆண்டு இறுதியில், மக்கள் பயன்பாட்டுக்காக மேம்பாலம் திறந்து விடப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த மேம்பாலத்தால் யுனான், குய்சோ, சிச்சுவான் ஆகிய மூன்று மாகாணங்கள் இணைக்கப்படுவதுடன், மக்களின் பொருளாதாரமும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.