உலகம்

கொரோனா பாதிப்பு: பிரான்சில் சுகாதார அவசரநிலை !

கொரோனா பாதிப்பு: பிரான்சில் சுகாதார அவசரநிலை !

jagadeesh

பிரான்ஸில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் அங்கு மீண்டும் சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதை அறிக்கை ஒன்றில் தெரிவித்த அந்நாட்டு அரசு, கோவிட் 19 பெருந்தொற்று பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்க வசதியாக அவசரநிலை தேவைப்படுவதாக கூறியுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரவு 9 மணி முதல் அதிகாலை 6 மணி வரை நான்கு வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய அதிபர் எம்மானுவல் மேக்ரான் சனிக்கிழமை முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கூறினார். ஊரடங்கின்போது மக்கள் உணவகங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனினும் பொதுப் போக்குவரத்துக்கு தடை இருக்காது என அதிபர் மேக்ரான் கூறினார். பிரான்சில் இதற்கு முன் கடந்த மார்ச் மாதம் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டு பின்னர் ஜூலையில் விலக்கிக்கொள்ளப்பட்டது.