உலகம்

சேகுவேராவின் 50-ம் ஆண்டு நினைவு தினம்: கியூபாவில் மாபெரும் பேரணி

சேகுவேராவின் 50-ம் ஆண்டு நினைவு தினம்: கியூபாவில் மாபெரும் பேரணி

rajakannan

புரட்சியாளர் சேகுவேராவின் 50-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கியூபாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட மாபெரும் பேரணி நடைபெற்றது.

அர்ஜெண்டைனாவில் பிறந்த சேகுவேரா, கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து கியூபா விடுதலைக்காகப் போராடினார். விடுதலைக்கு பின்னர், கியூப நாட்டின் வெளியுறவு அமைச்சராகவும் இருந்தவர். அதன்பின்னர் பொலிவியா நாட்டில் சமூக மாற்றத்தை கொண்டு வருவதற்காக தன் நாட்டையும் வகித்த பதவியையும் தூக்கி எறிந்துவிட்டு பொலிவியா சென்றார். மிகக் குறைந்த வயதிலேயே, 1967-ம் ஆண்டு இதேநாளில் பொலிவியா ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில், சேகுவேராவின் 50-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கியூபாவில் மாபெரும் பேரணி நடைபெற்றது. சுமார் 60 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இந்தப் பேரணியில் கலந்து கொண்டு தெருக்களில் ஊர்வலமாக சென்றனர். சேகுவேராவின் படங்கள் அடங்கிய பதாகைகளை மக்கள் வைத்திருந்தார்கள். சாண்டா க்ளாராவில் நடைபெற்ற இந்தப் பேரணியில் கியூப அதிபர் ரவுல் காஸ்ட்ரோ இந்த பேரணியில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் கந்து கொண்ட கியூபாவின் முதல் துணை அதிபர் மிகியுல் டியஸ் கனல் கூறுகையில், “எதிரிகள் விரும்பியதை போல் சேகுவேரா மரணமடையவில்லை. ஏராளமான இளைஞர்கள் அவரை முன்னுதாரனமாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்” என்றார்.