Masoud Pezeshkian x page
உலகம்

ஈரான் அதிபர் தேர்தல்| அடுத்த அதிபராகிறார் மசூத் பெசெஷ்கியன் வெற்றி!

ஈரானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மசூத் பெசெஷ்கியன் வெற்றி பெற்றுள்ளார்.

Prakash J

ஈரானின் அதிபராக இருந்தவர், இப்ராகிம் ரைசி. இவர், கடந்த மாதம் 19ஆம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க கடந்த மாதம் 28ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் 40 சதவீத வாக்குகள் அதாவது, 2.55 கோடி வாக்குகள் பதிவாகின. தோ்தல் முடிவுகளின்படி, சீர்திருத்தவாதி மசூத் பெசெஷ்கியன் 1.04 கோடி வாக்குகள் (44.40 சதவீதம்) பெற்றார். மற்றொரு வேட்பாளரான சயீது ஜலீலிக்கு 94 லட்சம் வாக்குகள் (40.38 சதவீதம்) கிடைத்தன.

இந்த முடிவுகளின்படி மசூத் பெசெஷ்கியன் அதிகபட்ச வாக்குகளை பெற்றிருந்தாலும், ஈரான் நாட்டின் சட்டத்தின்படி அதிபர் தேர்தலில் வெற்றி பெற, 50 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டியது கட்டாயமாகும்.

இதையும் படிக்க: ஒரு எருமை மாட்டுக்கு இருவர் உரிமை.. திணறிய போலீஸ்.. இறுதியில் தீர்வுகண்ட எருமை.. உ.பியில் ருசிகரம்!

அவ்வாறு பெறாவிட்டால், முதல் இரண்டு இடங்களில் உள்ள வேட்பாளர்களுக்கு இடையே 2-ஆஅம் சுற்று தேர்தல் நடத்தப்படும். அந்த வகையில் முதல் இரு இடங்களைப் பெற்றவா்களுக்கு இடையே 2-ஆவது மற்றும் இறுதிக்கட்ட தோ்தல் நடத்தப்பட்டது. அதன்படி, மசூத் பெசெஷ்கியனுக்கும் சயீது ஜலீலிக்கும் இடையே இரண்டாவது கட்ட தோ்தல் நேற்று நடைபெற்றது.

இதில், மசூத் பெசெஷ்கியன் வெற்றி பெற்றுள்ளார். தற்போது வரை எண்ணப்பட்ட 3 கோடி வாக்குகளில் 1.7 கோடி வாக்குகள் மசூத் பெசெஷ்கியன் கிடைத்து இருப்பதாகவும் ஜலிலிக்கு 1.3 கோடி வாக்குகள் கிடைத்து இருப்பதாகவும் ஈரான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, நாட்டின் அடுத்த அதிபராக மசூத் பெசெஷ்கியன் தேர்வாகி இருக்கிறார். விரைவில் பதவியேற்க இருக்கும் மசூத் பெசெஷ்கியனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ”ஹர்திக்கும் ஒரு மனிதன்தான்” - உருகிய க்ருணால் பாண்டியா.. குடும்ப கொண்டாட்டத்தில் இடம்பெறாத நடாஷா!