model image freepik
உலகம்

சீனா | அலுவலகத்தில் முத்தம்.. ஆக்‌ஷன் எடுத்த நிர்வாகம்.. வழக்கு தொடுத்த ஜோடிக்கு நீதிமன்றம் கொட்டு!

சீனாவில் இரண்டு ஊழியர்கள் திருமணத்திற்குப் புறம்பான உறவில் ஈடுபட்டு, வேலை செய்யும் இடத்தில் ஒருவரையொருவர் வெளிப்படையாக முத்தமிட்டதால் அவர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர்.

Prakash J

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு மருந்து நிறுவனத்தில் லியு என்று அழைக்கப்படும் ஆணும், சென் என அடையாளம் காணப்பட்ட பெண்ணும் ஒன்றாகப் பணிபுரிந்தனர். நாளடைவில் இவர்களுக்குள் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இதனை லியூவின் மனைவி கண்டுபிடித்துள்ளார். அதுதொடர்பான தகவல்களையும் நிறுவனத்தின் மேலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

model image

இதையடுத்து அவர்களுடைய திருமணத்தை மீறிய உறவு விவகாரம் வெளியுலகுக்குத் தெரியவந்தது. அதுபோல் சென்னின் கணவரும் இதுதொடர்பாக அவர்களிடம் கேட்டுள்ளார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க லியூ விடுப்பு எடுத்துள்ளார். அதன்பிறகு அவர் அலுவலகத்துக்கு வந்தபிறகு, மீண்டும் அவர்கள் இருவருக்குள்ளும் உறவு தொடர்ந்துள்ளது.

இதையும் படிக்க: விமானநிலைய ஒப்பந்தம்|அதானிக்கு எதிராக கென்யாவில் வெடித்த போராட்டம்; தடை விதித்த அந்நாட்டு நீதிமன்றம்

தவிர, இருவரும் பொது இடத்தில் முத்தமிட்டு உள்ளனர். இதுகுறித்து சக பணியாளர் ஒருவர் அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் அவர்களுக்குள் கருத்து மோதல் வெடித்தது.

இதையடுத்து ஊழியர்கள் 7 பேர் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், நிறுவன விதிகளை மீறியதாக அவர்கள் இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பணிநீக்கத்தை எதிர்த்து இருவரும் தனித்தனியாக நீதமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

model image

அந்த நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்த லியு ரூபாய் 27 லட்சம் நஷ்டஈடு கேட்டும், சென் ரூபாய் 3 லட்சம் நஷ்ட ஈடு கேட்டும் நீதிமன்றத்தை நாடினர். ஆனால் நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்த விவகாரம் இணையத்தி வைரலானதைத் தொடர்ந்து பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அதில் பயனர் ஒருவர், “இந்த வழக்கை நீதிமன்றத்திற்கே கொண்டு சென்றதே அவமானம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: பாகிஸ்தானின் கடல் பகுதியில் பெரிய எண்ணெய் வளம் கண்டுபிடிப்பு.. பொருளாதார நெருக்கடி குறையுமா?