தைவான் நாட்டில் அலுவலக விடுமுறைக்காக 37 நாளில் ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்தும் 3 முறை விவாகரத்தும் செய்துள்ள விநோதச் சம்பவம் நடந்துள்ளது.
தைவான் வங்கி ஒன்றில் கிளார்க்காக பணியாற்றும் நபர் ஒருவர் தன்னுடைய திருமணத்துக்காக 8 நாள்கள் விடுப்புக்கேட்டு கடந்தாண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி விண்ணப்பித்தார். விடுப்பு முடிந்தப்பின்பு அந்தப் பெண்ணை விவாகரத்து செய்துள்ளார். இதனையடுத்து மீண்டும் அந்தப் பெண்ணை திருமணம் செய்துக்கொள்வதற்கு வங்கியில் விடுப்புக்காக விண்ணப்பித்தார்.
இதுபோல அந்தப் பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்தது மூலம் அவருக்கு 32 நாள்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை கிடைத்துள்ளது. இந்த விவகாரத்தை வங்கி நிர்வாகம் வெகுநாள்களுக்கு பிறகு கண்டுபிடித்து அவர் ஏற்கெனவே ஊதியத்துடன் கொடுக்கப்பட்ட விடுமுறையை ரத்து செய்துள்ளது.
ஆனால் இது தொடர்பாக அந்நாட்டு தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார் 4 முறை திருமணம் செய்த நபர். இது ஒருபுறமிக்க தங்கள் நாட்டு தொழிலாளர் சட்டத்தில் இத்தகைய ஓட்டை இருக்கிறதா என தைவான் மக்கள் இந்தச் செய்தியை ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.