உலகம்

ப்ளே ஸ்டேஷனில் விளையாடிக் கொண்டிருந்தவர் மீது மின்னல் தாக்குதல் - உயிர்பிழைத்த அதிசயம்

Abinaya

இங்கிலாந்தைச் சேர்ந்த ஐடன் ரோவன் தனது அறையில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது அவரை மின்னல் தாக்கியுள்ளது.

33 வயதான ஐடன் ரோவன், சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு ப்ளே ஸ்டேஷனில் விளையாடிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் வெளியில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் இருந்துள்ளன. இரவு 10.30 மணியளவில், ஐடனின் உடலில் பலத்த சத்தமும் கடுமையான வலியும் உணர்ந்தவர் சற்று மயக்கமடைகிறார். சத்தம் கேட்டு வந்த அவரது மனைவி ரோவான், தனது கணவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்.

ஐடன் ரோவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரை மின்னல் தாக்கியது போல் உள்ளது என்றுள்ளனர். வீட்டிற்கு இருக்கும் ஒருவரை எப்படி மின்னல் தாக்கும் என்று குழம்பிக்கொண்டு இருக்கும் போது கண்விழித்த ஐடன் ரோவன் கூறியது, ‘நான் சோபாவில் அமர்ந்துகொண்டு ப்ளே ஸ்டேஷனில் கேம் விளையாடினேன். அப்போது வெளியே இடி இடித்துக்கொண்டிருந்தது. அப்போது தீடிரென்று உடலில் எதோ வெடித்தது போன்ற சத்தமும் உணர்வும் ஏற்பட்டது. என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் தனது வலது கை எரிவது போல இருந்தது" என்றார்.

ஐடன் ரோவன், சோபா அருகில் ஜன்னல் அல்லது கதவு திறந்து வைத்திருக்க கூடும். அதன் வழியில் தான் மின்னல் தாக்கியுள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் ஐடன் ரோவன், மின்னல் தாக்கிய போது, STRAY CAT விளையாடிக் கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டு இருந்தார். இந்த முரண் குறித்து சிலர் கேலி செய்து வருகிறார்கள். காரணம், ஸ்ட்ரே கேட் வீடியோ கேமில் இடி, மின்னலுடன் கூடிய பெரும் மழையின் போது தான், அந்த பூனைக்குட்டி தொலைந்து போகும்’ என்று குறிப்பிடுகிறார்கள்.