ஆஸ்திரேலியா முகநூல்
உலகம்

இப்படியும் ஒரு நோயா..! ஆஸ்திரியா நபருக்கு தொண்டைக்குள் வளர்ந்த முடி.. புகை பழக்கம்தான் காரணமா?!

ஆஸ்திரியாவில் 30 ஆண்டுகளாக புகைப்பிடித்த 52 வயதான நபர் ஒருவர், தொண்டையில் முடி வளரும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டதால் அதிர்ச்சி.

ஜெனிட்டா ரோஸ்லின்

ஆஸ்திரியாவில் 30 ஆண்டுகளாக தினமும் ஒரு பாக்கெட் சிகரெட் புகைத்து வந்த 52 வயது நபருக்கு தொண்டையில் முடிவளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் இதற்கான காரணங்கள் என்ன என்று தெளிவாக தெரியவில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும், இவரின் புகைப்பிடித்தல் பழக்கம் ஒரு தூண்டுதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.

நடந்தது என்ன?

அமெரிக்கன் ஜேர்னஸ் கேஸ் அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட நபர் நாளொன்றுக்கு ஒரு பாக்கெட் சிகரெட் புகைத்து வந்துள்ளார். இதனையடுத்தும் தனது 35 வயதில் இரவில் சுவாசக்கோளாறு, குறட்டை, கரகரப்பு மற்றும் நாள்பட்ட இருமல் என பலவிதமான இன்னல்களை சந்தித்துள்ளார். இதனால், 2007 ஆம் ஆண்டு மருத்துவரை சந்தித்துள்ளார்.

இவரை சந்தித்த மருத்துவர்கள் ,`பிராங்கோஸ்கோபி' (Bronchoscopy) மூலம் அவரைப் பரிசோதித்த பின்னர், இவரின் தொண்டை வீக்கமடைந்திருப்பதையும் அதில் சில முடிகள் வளர்ந்திருப்பதையும் கண்டறிந்தனர். இதன் மூலம், இவர் தொண்டையில் முடி வளரும் (Endotracheal Hair Growth) மிக அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை கண்டறிந்துள்ளனர்.

இதற்காக காரணம் என்னவென்று கண்டறிந்த போதுதான், இவருக்கு 10 வயது இருக்கும்போது, ஒரு முறை நீரில் மூழ்கியதால், தொண்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த சிகிச்சையில், இவரின் சுவாசத்தை சீராக்க தொண்டைக்குக் கீழ்புறக் கழுத்துப் பகுதியில் துளையிட்டு, ஆக்ஸிஜன் செலுத்தப்படும் 'ட்ரக்கியோஸ்டோமி ' (Tracheostomy) சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த செயல்தான் திருப்புமுனை!

காயத்தை மூட அவரது காதிலுள்ள தோல் மற்றும் குருத்தெலும்பை பயன்படுத்தி இருக்கின்றனர். இங்குதான் எண்டோட்ராஷியல் முடி வளர்ச்சி ஏற்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, அந்த முடியானது பிடிங்கி எரியப்பட்டுள்ளது. ஆனால், இது நிரந்தர தீர்வாக இல்லை,

இதன்பிறகு, மீண்டும் 2 அங்குல நீளமுள்ள முடி வளரவே, மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இப்படி, தொடர்ந்து 14 ஆண்டுகளாக மருத்துவமனைக்கு சென்று அதை வெளியேற்றி வந்துள்ளார். வளர்ந்த முடி பாக்டீரியாவால் மூடப்பட்டிருந்த நிலையில் இவருக்கு முதலில் ஆன்டிபயாடிக்ஸ் கொடுக்கப்பட்டன. அதன்பின்னர் தொண்டையில் முடி வளரும் வேரை எரிக்கும் சிகிச்சை (Argon plasma coagulation) அளிக்கப்பட்டுள்ளது.

நிறுத்திய உடன் நின்ற முடி வளர்ச்சி!

2022 ஆம் ஆண்டு புகைப்பிடிக்கும் பழக்கதை விட்டுவிட்டுள்ளார். அப்பொழுது, முடியின் வளர்ச்சியும் அவருக்கு நின்றுள்ளது. பிறகு இவருக்கு எண்டோஸ்கோபிக் ஆர்கான் பிளாஸ்மா உறைதலை மருத்துவர்கள் செய்துள்ளனர். இதன் பிறகு ஒரு வருடம் கழித்து தொண்டையில் இரண்டு முடி மட்டுமே வளர்ந்ததால், மீண்டும் அகற்றப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நிரந்தரமாக முடி வளர்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது.

28.3 மில்லியன் மக்களில் அல்லது ஒன்பது அமெரிக்கர்களில்  ஒருவர் இந்த அரிய பிரச்னையால் பாதிக்கப்படுவதாகவும், புகைப்பிடித்தல் பழக்கமே இந்த அரிய வகை நோய் ஏற்படுவதற்கு காரணம் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.