உலகம்

100 பலூன்களின் உதவியுடன் வானில் பறந்த நபர்

100 பலூன்களின் உதவியுடன் வானில் பறந்த நபர்

webteam

தென்னாப்பிரிக்காவில் டாம் மார்கன் என்பவர் நூறு பலூன்களை நாற்காலியில் கட்டி வானில் பறந்து சாகசம் செய்துள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்த டாம் மார்கன் என்பவர் ஹீலியம் வாயு அடைக்கப்பட்ட நூறு பலூன்களை நாற்காலியில் கட்டி வானில் பறந்து சாகசம் செய்தார். தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தினார். வானில் 8,300 அடி வரை அவர் பறந்து காட்டினார். சுமார் 2 மணி நேரம் வரை டாம் மார்கன் நிகழ்த்தி காட்டிய இந்த சாகசம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இதுகுறித்து டாம் மார்கன் கூறுகையில், குறைந்த செலவில் வானில் மிதந்து கொண்டு ஆப்பிரிக்காவை சுற்றி பார்ப்பது ஒரு அற்புதமான ஒன்று அதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது எனக் கூறினார். பலூனில் வானில் பறப்பதற்கு முன் பல்வேறு சோதனை செய்யப்பட்டதாகவும். அதற்கு பின்னரே இந்த இடத்தை தேர்வு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.