உலகம்

முதியவரின் தொண்டை மற்றும் நாசியில் இரண்டு மாதமாக குடியிருந்த அட்டைப்பூச்சிகள்

முதியவரின் தொண்டை மற்றும் நாசியில் இரண்டு மாதமாக குடியிருந்த அட்டைப்பூச்சிகள்

webteam

முதியவர் ஒருவருக்கு அடிக்கடி இருமல் வந்ததற்கு காரணம் அவரது தொண்டையில் இருந்த அட்டை பூச்சிகள் என்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. 

சீனாவைச் சேர்ந்த 60 வயது முதியவர் அடிக்கடி இருமல் வரும் பிரச்னையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் மருத்துவரிடம் பரிசோதனைக்குச் சென்றுள்ளார். அப்போது மருத்துவர்கள் இவருக்கு சிடி ஸ்கேன் எடுத்துள்ளனர். ஆனால் அதில் ஒன்று தெரியவில்லை. அதன்பின்பு பிரான்கோஸ்கோபி சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனர். 

இந்த பிரான்கோஸ்கோபி சிகிச்சையில் முதியவரின் நுரையீரல் மற்றும் சுவாசு குழாய் உள்ளிட்டவற்றில் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது இவரது உடம்பில் இரண்டு அட்டை பூச்சிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றில் ஒன்று அவரது வலது நாசி பகுதியிலும் மற்றொன்று தொண்டை பகுதியிலும் இருந்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு மயக்க மருத்து கொடுக்கப்பட்டு அட்டை பூச்சிகள் அகற்றப்பட்டன. 

இந்த முதியவர் மலைப்பகுதியிலிருந்த அருவியில் தண்ணீர் அருந்தியுள்ளார். அந்த தண்ணீரில் சிறிதாக இருந்த அட்டை பூச்சிகள் அவரது உடம்பிற்குள் சென்றுள்ளது. கிட்டதட்ட இரண்டு மாதங்கள் இந்த அட்டை பூச்சிகள் அவரது உடம்பில் வாழ்ந்து வந்ததாகவும் இவரது உடலிலுள்ள இரத்தத்தின் மூலம் அட்டை பூச்சிகள் வளர்ந்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சிகிச்சைக்கு பின்பு அந்த முதியவர் தற்போது குணமடைந்து வருவதாகவும் மருத்துவர்கள் கூறினர்.