இஸ்ரேல் வார், அன்வர் இப்ராகிம் ட்விட்டர்
உலகம்

"அச்சுறுத்தலுக்கு அஞ்சப் போவதில்லை; ஹமாஸுக்கே ஆதரவு” அமெரிக்காவை எதிர்க்கும் மலேசியா-பின்னணி இதுதான்

”மலேசிய மக்கள் ஹமாஸ் அமைப்பினருக்கு ஒருங்கிணைந்து ஆதரவளிக்க வேண்டும்” என அந்நாட்டுப் பிரதமர் அன்வர் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

Prakash J

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதேநேரத்தில், ஹமாஸுக்கு அரபு நாடுகள் ஆதரவளித்துள்ளன.

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர்

இதையடுத்து, ஹமாஸ் அமைப்பை ஆதரிக்கும் வெளிநாட்டு அமைப்புகளுக்கும், அரசாங்கங்களுக்கும் எதிராக அமெரிக்க நாடாளுமன்றம் கடந்த வாரம் தீர்மானம் இயற்றியது. இந்த நிலையில், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம், ஹமாஸுக்கு ஆதரவளித்துள்ளார்.

இதையும் படிக்க: “இந்தியாவை இழிவுபடுத்துகிறீர்கள்” - பெண்கள் குறித்து நிதீஷ் குமாரின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

இதுகுறித்து மலேசிய நாடாளுமன்றத்தில் பேசிய அவர், ”மலேசிய மக்கள் ஹமாஸ் அமைப்பினருக்கு ஒருங்கிணைந்து ஆதரவளிக்க வேண்டும். ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இனவெறியை எதிர்த்து ஆப்பிரிக்க மக்களுக்காகப் போராடிய நெல்சன் மண்டேலாவைப்போல், ஹமாஸ் அமைப்பினர் தங்கள் மக்களுக்காகப் போராடி வருகின்றனர்.

அமெரிக்கா எனும் தனிநாடு கொண்டுவந்துள்ள தீர்மானத்திற்கோ, அச்சுறுத்தலுக்கோ நான் அஞ்சப் போவதில்லை. ஐக்கிய நாடுகள் சபை எடுக்கும் முடிவுகளைத்தான் நாங்கள் அங்கீகரிப்போம்” என உறுதியாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ’காஸாவின் மீதான இஸ்ரேல் தாக்குதலை காட்டுமிராண்டித்தனம்’ என கண்டித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ‘நான் ரெடிதான் வரவா...’ ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் சுப்மன் கில்!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் 30 நாட்களைக் கடந்தும் நீடிக்கிறது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தி, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசித் தாக்கினர். அதன்பின்னர் இஸ்ரேல் அதிகாரபூர்வமாக போர் பிரகடனம் செய்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

israel war

இந்தப் போரில் வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வந்த இஸ்ரேல் ராணுவம், காஸாவுக்குள் நுழைந்து தரைவழித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. போர் கொடூரமடைந்து வரும் நிலையில், அங்குள்ள மக்களின் நிலை மோசமடைந்து வருகிறது. உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதுவரை 4,300 குழந்தைகள் உட்பட 10,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. அதேநேரத்தில், உலகத்தலைவர்கள் போர் நிறுத்தத்துக்கு அழைப்புவிடுத்து வருகின்றனர். ஆனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதற்கு இடம்கொடுக்கவில்லை. மாறாக, ஒட்டுமொத்த காஸாவையும் சுற்றிவளைத்து தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது.

இதையும் படிக்க: "போருக்கு பின் காஸாவின் பாதுகாப்பை இஸ்ரேல் ஏற்கும்.." - இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு