உலகம்

சிங்கப்பூருக்கான புல்லட் ரயில் திட்டம் ரத்து: மலேசிய பிரதமர் அதிரடி

சிங்கப்பூருக்கான புல்லட் ரயில் திட்டம் ரத்து: மலேசிய பிரதமர் அதிரடி

webteam

மலேசிய தலைநகர் கோலாலம்பூர் முதல் சிங்கப்பூர் வரை திட்டமிடப்பட்டிருந்த அதிவேக புல்லட் ரயில் திட்டத்தை மலேசிய பிரதமர் மகாதீர் அதிரடியாக ரத்து செய்துள்ளார்.

மலேசிய தேர்தலில் வெற்றிப் பெற்று 93 வயதில் பிரதமராக பதவியேற்றுள்ள மகாதீர், அந்நாட்டுக்கு ஏற்பட்டுள்ள கடன் சுமையை குறைப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறார். குறிப்பாக அனாவசியமான செலவுகளை குறைக்கப் போவதாக அவர் அறிவித்திருந் தார். அதன்படி மலேசியாவின் கோலாலம்பூரையும், சிங்கப்பூரையும் இணைக்கும் அதிவேக புல்லட் ரயில் திட்டத்தை அவர் ரத்து செய்துள்ளார்.

சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடி மதிப்புள்ள இந்த திட்டம் கடந்த ஆட்சியின்போது இருநாட்டுக்கும் இடையே ஒப்பந்தமானது. தற்போது இந்த திட்டத்தை ரத்து செய்திருப்பதன் மூலம், சிங்கப்பூருக்கு இழப்பீடு ஏற்படும் என கூறப்படுகிறது. சிங்கப்பூருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் தயாராக இருப்பதாக மகாதீர் அறிவித்துள்ளார்.