உலகம்

புதிதாக பிறந்த பாண்டாவுக்கு 'யீ யீ' என பெயர் சூட்டிய மலேசியர்கள்

புதிதாக பிறந்த பாண்டாவுக்கு 'யீ யீ' என பெயர் சூட்டிய மலேசியர்கள்

webteam

மலேசியாவில் புதிதாக பிறந்த பாண்டா கரடிக்கு யீ யீ என பெயரிட்ட்டுள்ளனர். 

மலேசியா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே பாண்டா கரடிகளை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. அதன்படி சீனாவிலிருந்து மலேசியாவுக்கு அனுப்பப்படும் பாண்டா கரடிகள் இனப்பெருக்கம் செய்து, பிறந்த குட்டிக்கு 2 வயதானதும் மீண்டும் சீனாவுக்கு அனுப்புவதே ஒப்பந்ததின் நோக்கமாகும். 

இந்நிலையில் மலேசியாவில் பிறந்த பாண்ட கரடிக்கு யீ யீ என பெயரிடப்பட்டது. கோலாலம்பூரில் நடைபெற்ற பெயர் சூட்டுவிழாவில் கலந்துகொண்டு பேசிய அந்நாட்டு அமைச்சர் சேவியர் ஜெயக்குமார்,‌ சீன மொழியில் யீ யீ என்றால் நட்பு என்பது பொருள். மலேசிய - சீன நட்புறவை பறைச்சாற்றும் விதமாகவே இந்த பெயர் சூட்டப்படுவதாக தெரிவித்தார்.