பைசல் ஹலிம் ட்விட்டர்
உலகம்

மலேசிய கால்பந்து வீரர் மீது ‘ஆசிட் வீச்சு’ - ஒரே வாரத்தில் இரண்டாவது கால்பந்து வீரர் மீது தாக்குதல்!

மலேசியாவில் தேசிய கால்பந்து வீரர் ஒருவர் மீது ஆசிட் வீசப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

மலேசிய தேசிய கால்பந்து அணியின் வீரராக இருப்பவர், பைசல் ஹலிம். 26 வயதான பைசல், சிலாங்கூர் கால்பந்து கிளப்பில் விங்கராகவும் உள்ளார்.

இந்த நிலையில், வார இறுதிநாளான நேற்று (மே 5) அவர் மீது யாரோ ஆசிட் வீசிச் சென்றுள்ளனர். இதில் அவருடைய கழுத்து, தோள்பட்டை, கைகள் மற்றும் மார்பு ஆகியன பாதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை சிலாங்கூர் மாநிலத்தின் விளையாட்டு அதிகாரி நஜ்வான் ஹலிமி உறுதிப்படுத்தி உள்ளார்.

பைசல் ஹலிம்

இதுகுறித்து அவர், ”இந்த வன்முறையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். விரைவில் இந்த வன்முறையை இழைத்த நபரைக் போலீசார் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: Fact Check|பிரதமர் மோடி வேட்புமனுத் தாக்கல்? உடன் சென்ற குடியரசுத் தலைவர்.. நடந்தது என்ன?

முன்னதாக, கடந்த வாரம் மற்றொரு தேசிய வீரரான அக்யார் ரஷித், கிழக்கு மாநிலமான தெரெங்கானுவில் அவரது வீட்டிற்கு வெளியே நடந்துசென்றபோது, அவரை வழிமறித்து மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் அவர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டார் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்திருந்தன. இதனால் அவருக்கு தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டதாகவும், அவரிடமிருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதாகவும் செய்திகள் வெளியாகின.

அக்யார் ரஷித்

இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக மலேசிய கால்பந்து சங்கத்தின் தலைவர் ஹமிடின் முகமது அமீன், ”இரண்டு தாக்குதல் சம்பவங்களும் வருத்தம் அளிக்கிறது. அவர்கள் இருவரும் விரைவில் குணமடைய மலேசிய மக்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

எனினும், மலேசியாவில் தொடர்ந்து தேசிய கால்பந்து வீரர்கள் தாக்கப்படும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க: csk vs pbks| டக் அவுட் ஆன தோனி.. உற்சாகத்தில் கை தட்டிய ப்ரீத்தி ஜிந்தா.. #ViralVideo