உலகம்

ஜூன் 9 வரை பொது முடக்கம் நீட்டிப்பு : மலேசிய அரசு அறிவிப்பு

ஜூன் 9 வரை பொது முடக்கம் நீட்டிப்பு : மலேசிய அரசு அறிவிப்பு

webteam

கொரோனா வைரசால் அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கம் ஜூன் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மலேசிய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரசால் உலக அளவில் 41 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 14.5 லட்சத்திற்கு மேலானோர் சிகிச்சை பலன்பெற்று வீடு திரும்பியுள்ளனர். பாதிப்பு குறையாமல் இருப்பதால் உலகின் பல்வேறு நாடுகளும் இன்னும் பொது முடக்கத்தை நீட்டித்து வருகின்றன.

அந்த வகையில் மலேசியாவிலும் பொது முடக்கம் ஜூன் 9ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மலேசியப் பிரதமர் முஹித்தின் யாஸின் கூறும்போது, தங்கள் நாட்டில் பொருளாதாரம் கட்டுக்குள் இருப்பதால் மக்கள் நலன் கருதி பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாகத் தெரிவித்திருக்கிறார். அதேசமயம் ஏராளமானோர் பொது முடக்கக் காலத்தில் தங்களால் முடிந்த வேலையைச் செய்யத் தயாராகி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியாவில் இதுவரை 6,656 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 108 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5,025 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.