உலகம்

மலேசியாவுக்கு அடுத்த வருடம்தான் போகமுடியும்- டிசம்பர் வரையில் கொரோனா கட்டுப்பாடுகள்

மலேசியாவுக்கு அடுத்த வருடம்தான் போகமுடியும்- டிசம்பர் வரையில் கொரோனா கட்டுப்பாடுகள்

webteam

உலக நாடுகள் பலவற்றில் கொரோனா பரவல் குறைந்துவரும் நிலையில், பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதேவேளையில், அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன், மெக்சிகோ, பிரேசில் போன்ற நாடுகளில் தொற்று குறையாமல் பாதிப்பும் தொடர்கிறது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் கொரோனா பரவல் முற்றிலுமாக குறைந்துள்ளது.

மலேசியாவைப் பொறுத்தவரையில், டிசம்பர் கடைசி வரையில் வெளிநாட்டுப் பயணிகள் வர தடை செய்யப்பட்டுள்ளது. பிரதமர் முஹையதின் யாசின் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், உலகம் முழுவதும் தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதாகவும், இங்கு நோய் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அவ்வப்போது பாதிப்பு ஏற்படுவதாகும் தெரிவித்தார்.

இதுவரை மலேசியாவில் 9 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 125 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.