உலகம்

இந்தியாவில் மலேரியா அதிகம்: அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் மலேரியா அதிகம்: அதிர்ச்சி தகவல்

webteam

தெற்காசிய நாடுகளிலேயே‌‌ இந்தியாவி‌ல் தான், மலேரியா பாதிப்பு அதிகமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக நாடுகளில் மலேரியா காய்ச்சல் குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், 
இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் மலேரியா காய்ச்சல் தாக்கத்தால் 331 பேர் உயிரிழந்ததாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. மலேரியாவை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் இந்தியா பின் தங்கி இருப்பதாகவும், உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

ஆனால் இதனை மறுத்துள்ள மத்திய சுகாதார துறை அமைச்சர் நட்டா, இந்தியாவில் புதிதாக மலேரியாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது என கூறியுள்ளார். இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மலேரியா பாதிப்பு அதிகமாக இருந்த நாடுகளில் நைஜீரியா முதலிடத்தையும், காங்கோ இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளன.