டொனால்டு ட்ரம்ப், கமலா ஹாரிஸ் எக்ஸ் தளம்
உலகம்

அதிபர் தேர்தல் | கமலா கோட்டைவிட்டது எங்கே? ட்ரம்ப் தட்டித் தூக்கியது எங்கே? 13 முக்கிய பாயிண்ட்ஸ்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப்வின் வெற்றி குறித்தும், கமலா ஹாரின்ஸின் தோல்வி குறித்தும் அலசப்பட்டு வருகின்றன. அது குறித்து இங்கு பார்ப்போம்.

Prakash J

அமெரிக்காவின் 47ஆவது அதிபராக, டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயக கட்சியைச் சேர்ந்த தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் தோல்வியைத் தழுவினார். இதையடுத்து, இருவருடைய வெற்றி தோல்வி குறித்த காரணங்கள் அலசப்பட்டு வருகின்றன. அந்த வகையில், முதலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றிபெற்றதற்கு முக்கியமான காரணங்கள் என்னவென்று இங்கு பார்ப்போம்..

டொனால்டு ட்ரம்ப் தட்டித் தூக்கியது எங்கே?

1. ஆரம்பம் முதலே ஜனநாயகக் கட்சி சார்பில் முதலில் நிறுத்தப்பட்ட ஜோ பைடனை விமர்சனரீதியாக எதிர்கொண்டார். அவரது ஆட்சி முறையையும் கடுமையாக விமர்சித்தார். இது, இருவரும் பங்கேற்ற விவாதத்தின்போது எதிரொலித்தது. அதுவரை ட்ரம்பின் கையே ஓங்கியிருந்தது. இதன்பிறகுதான் ஜோ பைடனுக்குப் பதில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் களமிறக்கப்பட்டார்.

2. கமலா ஹாரிஸ் களம் கண்டபிறகு, ட்ரம்பிற்கு கடுமையான போட்டி அளித்தார். தவிர, குறைந்த நாட்களிலேயே தேர்தல் நிதியைப் பலரிடமிருந்து அதிகளவில் பெற்றார். ஆனால், ட்ரம்பிற்கு எலான் மஸ்க் மட்டுமே வாரியிறைத்தார்.

3. கமலாவும் ட்ரம்பும் தீவிரமாய்ப் பிரசாரம் மேற்கொண்டனர். இந்தச் சூழலில்தான் ட்ரம்ப் மர்ம நபரால் துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கு ஆளானார். இது, அவருக்கு மேலும் அனுதாபத்தைப் பெற்றுத் தந்தது. இது ஒருமுறை மட்டுமல்ல. மூன்றுமுறை இதேபோல் துப்பாக்கி விவகாரத்தால் பேசப்பட்டார்.

4. ஒவ்வொரு முறை பிரசாரத்தின்போதும், ’அமெரிக்கா அமெரிக்கர்களுக்கானது’ என்றக் கொள்கையைத் தீவிரவாக வைத்து முழக்கமிட்டார். ஆனால், இந்தக் குடியேற்றக் கொள்கையை பைடன் அரசு சாதாரணமாகவே கையாண்டது. எல்லைப் பிரச்னையைக் கையில் எடுத்துக்கொண்டார்.

இதையும் படிக்க: ”ட்ரம்ப் தான் எனது தந்தை” - வைரலாகும் பாகிஸ்தான் இளம்பெண் பேசிய வீடியோ! உண்மை என்ன?

ட்ரம்புவிற்கு பக்கபலமாய் நின்ற எலான் மஸ்க்

5. கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபரானால், மூன்றாம் உலகப்போர் நிச்சயம் வரும் என முழங்கினார். ரஷ்யா - உக்ரைன் இடையே நடைபெறும் போரும், இஸ்ரேல் - காஸார் இடையே நடைபெறும் அதற்குக் காரணம். ஆம், உக்ரைன் மற்றும் இஸ்ரேலுக்கு ஜோ பைடன் அரசு நிதியுதவியும், ஆயுத உதவியும் அளித்து வருகிறது. இதை, முக்கியப் பேசுபொருளாக்கினார், ட்ரம்ப். தாம் பதவியேற்றால் போர் நிறுத்தம் கொண்டுவரப்படும் என அடிக்கடி முழங்கினார்.

6. இந்தப் போர்களுக்கு உதவிசெய்யும் அமெரிக்கா, மறுபுறம் உள்நாட்டில் ஏற்பட்ட பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பு, நிர்வாகச் சீர்திருத்தம் ஜோ பைடன் அரசு கவனம் செலுத்தவில்லை.

7. ஒவ்வொரு பிரசாரத்தின்போதும் கமலா ஹாரிஸின் இனத்தையும், குடியுரிமையையும் விமர்சித்து வந்தார். முக்கியமாக, அவர் வேறுநாட்டவர் என்பதையும் கறுப்பினத்தவர் என்பதையும் அமெரிக்க மக்கள்முன்பு விதைத்தார். இது, அமெரிக்க வெள்ளையர்களிடம் ஓட்டுகளை வேட்டையாடச் செய்தது.

8. இறுதியாக, ட்ரம்ப் எவ்வளவுதான் பிரசாரம் மேற்கொண்டாலும், அவரது நெருங்கிய நண்பரும் தொழிலதிபருமான எலான் மஸ்க்கின் அப்போதைய எக்ஸ் தள பதிவுகளும், விமர்சனங்களும் வெற்றியைப் பெற்றுத் தந்தன. அவரும், கமலா ஹாரிஸுக்கு எதிராக பல பதிவுகளை வெளியிட்டு வந்தார். வெளிப்படையான ஆதரவு போதாது என்று தினமும் தமது எக்ஸ் வலை தள பக்கத்தில் ட்ரம்புக்கு ஆதரவான கருத்துகளை எலான் மஸ்க் வெளியிட்டுக் கொண்டே இருந்தார். அவரின் இந்நடவடிக்கை ட்ரம்பின் வெற்றிக்கு முக்கிய காரணமாக மாறியது எனலாம். மேலும் அவர், டொனால்டு ட்ரம்ப்வை வெற்றிபெற வைக்கும் முயற்சியில் அமெரிக்க மக்களிடம் ’தினம் ஒருவருக்கு ரூ.8 கோடி’ என்ற அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சியூட்டினார்.

இதையும் படிக்க: பதவியேற்கும் ட்ரம்ப்.. காத்திருக்கும் 10 லட்சம் இந்தியர்களுக்குப் பாதிப்பு.. கிரீன் கார்டுக்கு செக்?

கமலா ஹாரிஸ் கோட்டைவிட்டது எங்கே?

டொனால்டு ட்ரம்பிற்கு மேற்சொன்னவையெல்லாம் வெற்றிக்கான காரணங்களாக அமைந்த நிலையில், கமலா ஹாரிஸ் கோட்டைவிட்டது எங்கே என இங்கே பார்க்கலாம்.

1. ஜோ பைடனுக்கு முன்னதாகவே, கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருந்தால், இன்னும் நிறைய வாக்குச் சதவிகிதத்தைப் பெற்றிருக்க முடியும்.

2. ட்ரம்பிற்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்த எலான் மஸ்க்போல், கமலாவிற்கும் இப்படியொரு ஆதரவு இருந்திருந்தால் அவர் வெற்றிபெற்றிருக்க வாய்ப்பு உருவாகி இருக்கும்.

3. ட்ரம்ப் அடிக்கடி குறிப்பிட்டதுபோல், கமலா ஹாரிஸின் குடியேற்ற உரிமை குறித்த பிரச்னை அமெரிக்க மக்களிடையே வெளிப்பட்டது.

4. ட்ரம்ப் பிரசாரத்தில் எழுப்பிய எல்லைப் பிரச்னை, குடியேற்றக் கொள்கை, அண்டை நாடுகளில் போர் நிறுத்தம், உள்நாட்டு வேலைவாய்ப்பு, குற்றவியல் நீதி சீர்திருத்தம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உள்ளிட்ட நிர்வாகப் பிரச்னைகளில் கமலா ஹாரிஸின் கவனம் செலுத்தாதது அவருடைய தோல்விக்கு வழிவகுத்தது. இது, விமர்சனங்களையும் எதிர்கொண்டது.

5.பெண்களுக்கு ஆதரவாக கருக்கலைப்பு கட்டுப்பாடு சட்டம் ரத்து செய்யப்படும், பெண் குழந்தைகளுக்கு அரசு நிதி, வரிச்சுலுகை உள்பட பல்வேறு வாக்குறுதிகளை கமலா ஹாரிஸ் அளித்தார். ஆனால் அவை எதுவும் கமலா ஹாரிஸுக்கு கைகொடுக்காமல் போனது. காரணம், அவை அனைத்தையும் மறக்கும்படியாக ஆளும் அரசுமீது ட்ரம்ப், கடுமையான விமர்சனங்களை வைத்தார்.

இதையும் படிக்க: விரைவில் பதவியேற்பு.. தயாராகும் வெள்ளைமாளிகை.. லிங்கனின் ஆவி நடமாடுவதாக மீண்டும் கட்டுக்கதை வைரல்!