உலகம்

பிரதமர் இம்ரான் கான் பதவி விலக வேண்டும் - பாகிஸ்தான் எதிர்க்கட்சி வலியுறுத்தல்

பிரதமர் இம்ரான் கான் பதவி விலக வேண்டும் - பாகிஸ்தான் எதிர்க்கட்சி வலியுறுத்தல்

JustinDurai
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான நவாஸ் முஸ்லீம் லீக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அண்மையில் சர்வதேச செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த இம்ரான் கான், நவாஸ் ஷெரிப் மற்றும் பெனாசிர் புட்டோவின் குடும்பங்கள் ஊழலில் திளைத்து நாட்டையே அழித்து விட்டதாக சாடியிருந்தார். இந்நிலையில், இம்ரான்கானை சாடியுள்ள நவாஸ் முஸ்லீம் லீக் கட்சி,  ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆன பிறகும் தன் ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட வழியில்லாமல்தான், முன்னாள் ஆட்சியாளர்களை இம்ரான் கான் குறைகூறுகிறார் என விமர்சித்துள்ளது. மேலும், இம்ரான்கான் உடனே பதவி விலக வலியுறுத்தியுள்ளது.