உலகம்

நீண்ட நேர பகல் தூக்கம் உயிருக்கே ஆபத்து - ஆய்வில் வெளியான தகவல்..!

நீண்ட நேர பகல் தூக்கம் உயிருக்கே ஆபத்து - ஆய்வில் வெளியான தகவல்..!

webteam

கொஞ்ச நேரம் நிம்மதியாக உறங்கினால் உடலுக்கு நல்லது என்று பலரும் நம்புகிறோம். அந்த நேரத்தையே மேலும் நீட்டினால், அது மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களுக்குக் காரணமாக மாறிவிடும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாகக் கூட மாறிவிடலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. பகல்நேரத் தூக்கங்களுக்கும் இதய நோய்களுக்கும் தொடர்பு இருப்பதாக முந்தைய ஆய்வுகளில் முரண்பட்ட தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அவர்கள் இரவு நேர தூக்கத்தின் நேரத்தை கணக்கில் கொள்ளவில்லை.

இஎஸ்சி காங்கிரஸ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகளில், நீண்ட பிற்பகல் தூக்கம் இதய நோய்களுக்கும் உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. "பகல்நேர நீண்டநேர தூக்கும் பொதுவாக நல்ல பழக்கம் என்றுதான் உலகம் முழுவதும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்" என்கிறார் சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் ஷி பென்.

ஆனால், ஒரு மணி நேரத்திற்கும் மேலான பிற்பகல் தூக்கம் , 30 சதவீதம் உயிருக்கு ஆபத்தாகவும், 34 சதவீதம் இதய நோய்களுக்குக் காரணமாக அமைந்துவிடுவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.