சைக்கிளில் பெல்லுக்கு பதிலாக ஹாரன் ஒலி எழுப்பும் கருவியை பொருத்திய லண்டன் இளைஞர்.
லண்டனைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது சைக்கிளில் பெல்லுக்கு பதிலாக காரின் ஹாரன் ஒலியை எழுப்பும் கருவியை பொருத்தியுள்ளார். டேவிட் என்ற அந்த இளைஞர் லண்டன் நகரில் எங்கு சென்றாலும் சைக்கிளில் பயணம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். சாலையில் செல்லும் போது எதிரே வரும் பாதசாரிகள் சைக்கிள வருவதை கூட கவனிக்காமல் மொபைலில் மூழ்கியிருப்பதால் டேவிட் எரிச்சல் அடைந்தார். இதனால் காரின் ஹாரன் ஒலியை எழுப்பும் கருவியை தனது சைக்கிளில் பொருத்தியுள்ளார். பெல் அடித்தாலும் பாதசாரிகளின் காதுகளுக்கு கேட்பதில்லை என்று கூறும் அவர் ஹாரன் ஒலிக்கு அச்சமடைந்து பாதசாரிகள் விலகுவது நகைச்சுவையை ஏற்படுத்துவதாக இருக்கிறது என தெரிவித்தார்.