புருண்டி நாடு ட்விட்டர்
உலகம்

உலகின் ஏழை நாடுகள் பட்டியல்: முதலிடத்தில் புருண்டி நாடு.. 2வது இடத்தில் ஆப்கானிஸ்தான்!

உலகின் ஏழை நாடுகள் பட்டியலில் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள புருண்டி நாடு முதலிடத்தில் உள்ளது.

Prakash J

உலகம் அறிவியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முன்னேறிக் கொண்டிருந்தாலும், அதிலும் சில நாடுகள் ஏழைகளாகவே உள்ளன. அங்குள்ள மக்கள் பசி, பட்டினியுடன் ஏழைகளாகவே வாழ்கின்றனர்.

அந்த வகையில் சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி, உலகின் ஏழ்மையான நாடுகளின் பட்டியலில் பெரும்பாலும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள புருண்டி நாடு முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியல் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

புருண்டி நாடு

உலக வங்கியின் தரவுகளின்படி, புருண்டியின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி வெறும் USD 238.4. ஆக உள்ளது. இதைத் தொடர்ந்து 2வது இடத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது. 3வது மத்திய ஆப்பிரிக்க குடியரசு, 4வது இடத்தில் சியரா லியோன், 5வது இடத்தில் சோமாலியா, 6வது இடத்தில் மடகாஸ்கர், 7வது இடத்தில் நைஜர், 8வது இடத்தில் சிரிய அரபு குடியரசு, 9வது இடத்தில் மொசாம்பிக், 10வது இடத்தில் காங்கோ ஆகிய நாடுகள் உள்ளன.

இதையும் படிக்க: ”என்உயிருக்கு ஆபத்துனா அதிபர்தான் காரணம்”-இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் பதவிநீக்கமும் பின்னணியும்

மேலும், நேபாளம், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட இந்தியாவின் அண்டை நாடுகளும் உலகளவில் முதல் 40 ஏழ்மையான நாடுகளில் இடம்பெற்றுள்ளன. இந்த அண்டை நாடுகளில் மிக ஏழ்மையான நாடாக பாகிஸ்தான் தனித்து நிற்கிறது.

அதேநேரத்தில், உலகின் பணக்கார நாடுகளில் ஐரோப்பிய நாடான மொனாக்கோ முதலிடம் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து லிச்சென்ஸ்டீன், லக்சம்பர்க், பெர்முடா, நார்வே, அயர்லாந்து, ஸ்விட்சர்லாந்து, கெய்மன் தீவுகள், கத்தார், சிங்கப்பூர் ஆகிய நாடுகள், அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இதையும் படிக்க: எச்சரித்த நடுவர்! எதிர்ப்பை மீறி பாலஸ்தீன கொடியுடன் பேட்டை பயன்படுத்திய பாக். வீரருக்கு அபராதம்!