உலகம்

இந்தியா, சீனா போல அமெரிக்காவும் வளர்ந்து வரும் நாடே: டொனால்ட் ட்ரம்ப்

இந்தியா, சீனா போல அமெரிக்காவும் வளர்ந்து வரும் நாடே: டொனால்ட் ட்ரம்ப்

jagadeesh

இந்தியா மற்றும் சீனா ஆகிய‌ நாடுகளைப்போல அமெரிக்கா வளர்ந்து வரும் நாடு தான் என அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் கூறியிருக்கிறார்.

சுவிட்சர்லாந்தில் நடந்து வரும் உலகப் பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் பேசிய ட்ரம்ப் இவ்வாறு பேசியுள்ளார். சர்வதேச வர்த்தக அமைப்பை பொருத்தவரையில் இந்தியாவும், சீனாவும் வளர்ந்து வரும் நாடுகளாக கருதப்படும் நிலையில் அமெரிக்காவும் அவ்வாறே கருதப்பட வேண்டும் என ட்ரம்ப் கூறியுள்ளார்.

மேலும் சீனா மற்றும் இந்தியா இரு நாடுகளும் வளர்ந்து வரும் நாடுகளாக கருதப்படுவதால் உலக வர்த்தகத்தில் அதிக சலுகைகளைப் பெறுகின்றன எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார். இந்தியாவும் சீனாவும் வளர்ந்து வரும் நாடுகளாக கருதப்படக்கூடாது, ஆனால் அவ்விரு நாடுகளும் கருதப்படும்போது அமெரிக்காவும் வளர்ந்து வரும் நாடாகவே கருதப்பட வேண்டும் என ட்ரம்ப் சர்ச்சையை கிளப்பியுள்ளார். அடுத்த மாதம் ட்ரம்ப் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அவர் இவ்வாறு பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.