உலகம்

ஊரடங்கால் பருவநிலையில் குறைவான தாக்கம்: இயற்கை பற்றிய சர்வேதச ஆய்வில் தகவல்

ஊரடங்கால் பருவநிலையில் குறைவான தாக்கம்: இயற்கை பற்றிய சர்வேதச ஆய்வில் தகவல்

webteam

இயற்கை மற்றும் பருவநிலை மாற்றம் பற்றிய சர்வதேச ஆய்விதழில் கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நாட்களால் பருவ நிலையில் ஏற்பட்ட மாற்றம் பற்றிய கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் ஊரடங்கு நாட்களில் பருவநிலையில் குறைவான தாக்கமே ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஊரடங்கின்போது பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தில் கணிசமான அளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 30 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இதுவொரு வரவேற்கத்தக்க மாற்றம். ஆனாலும் பொது முடக்கம் காரணமாக உமிழ்வைக் குறைப்பது நீண்ட காலத்திற்கு பருவநிலை மாற்றங்களில் "மிகக் குறைவான" தாக்கத்தையே ஏற்படுத்தும் எனக் கூறப்பட்டுள்ளது.

பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில், பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வில் கணிசமான அளவுக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமுடக்கக் காலத்தில் மக்களின் வாழ்க்கை மற்றும் பத்துவிதமான பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றங்களில் ஏற்படுத்திய மாற்றங்களைப்  பற்றியும் விரிவான தகவல்களை சர்வதேச பருவநிலை பற்றிய ஆய்விதழ் வெளியிட்டுள்ளது.