உலகம்

நாடு திரும்பியதும் ராஜினாமா: சவுதியிலிருந்து லெபனான் அதிபர் அறிவிப்பு

webteam

லெபனான் பிரதமர் சத் அல் ஹரிரி, சவுதியில் இருந்து இரண்டு, மூன்று தினங்களுக்குள் தாய்நாடு திரும்பியதும், முறைப்படி தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

அண்மையில் சவுதி அரேபியா சென்ற சத் அல் ஹரிரி, ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு தன்னை கொல்ல சதித் திட்டம் தீட்டியிருப்பதாகவும், இதன் காரணமாகவே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்திருந்தார். இந்த குற்றச்சாட்டை மறுத்த ஹிஸ்புல்லா அமைப்பு, சவுதியின் கட்டாயத்தின் பேரிலேயே, ஹரிரி, பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் முதல் முறையாக ரியாத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஹரிரி, தன்னை யாரும்‌ பிணைக் கைதியாக பிடித்து வைக்கவில்லை என்றும் இரண்டு, மூன்று தினங்களில் நாடு திரும்பியதும் முறைப்படி பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளார்.