உலகம்

தாய்நாடு திரும்பிய லெபனான் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு

தாய்நாடு திரும்பிய லெபனான் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு

webteam

சவுதி அரேபியாவில் இருந்தப‌டி தனது‌ பதவியை ராஜினாமா செய்த லெபனான் பிரதமர் சாத் அல் ஹரிரி, இரு வாரங்களுக்குப் பின் தாய்நாட்டுக்கு திரும்பினார்.‌ 

சவுதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொண்ட லெபனான் பிரதமர் ஹரிரி, அங்கிருந்தபடியே பதவியை ராஜினாமா செய்தார். அவரது இந்த முடிவிற்கு சவுதி அரேபியாதான் காரணம் என பலரும் குற்றம்சாட்டினர். அத்துடன் ஹரிரி நாடு திரும்பாமல் இருந்ததால், அவர் நாடு திரும்ப வேண்டும் என லட்சக்கணக்கான லெபனான் மக்கள் கோரிக்கை எழுப்பி வந்தனர். இதையடுத்து பிரான்ஸ் சென்று அந்நாட்டு அதிபர் மேக்ரோனை சந்தித்த ஹரிரி, லெபனானின் சுதந்திர தின விழாவுக்காக விரைவில் நாடு திரும்பப் போவதாகவும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நாடு திரும்பிய ஹரிரி, தலைநகர் பெய்ரூட்டில் உள்ள சர்வதேச விமான நிலை‌யத்தில் தரையிறங்கியதும், அங்கு கூடியிருந்த அவரது ஆ‌தரவாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொ‌டர்ந்து தனது தந்தையின் நினைவிடத்துக்கு சென்று ஹரிரி அஞ்சலி செலுத்தினார். பின்னர் பெய்ரூட்டில் நடந்த‌ தேசிய தின அணிவகுப்பிலும் ஹரிரி கலந்து கொண்டார்.