உலகம்

வெடிவிபத்து எதிரொலி- ராஜினாமா அறிவிப்பை வெளியிட்ட லெபனான் பிரதமர்

webteam

பெய்ரூட் வெடிவிபத்தை தொடர்ந்து லெபனான் நாட்டு பிரதமர் ஹசன் டியாப் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் ஆற்றிய உரையில் தன் ராஜினாமா அறிவிப்பை பிரதமர் வெளியிட்டார். நாட்டில் அரசை விட ஊழல் மிகப்பெரியதாக உள்ளது என்றும் அவர் அப்போது தெரிவித்தார். பிரதமர் விலகலை அந்நாட்டு அதிபர் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் புதிய அரசு அமையும் வரை, பிரதமராக தொடருமாறு ஹசன் டியாப்பை கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக கடந்த 4ஆம் தேதி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் ரசாயனம் வெடித்து சிதறியதில் சுமார் 160 பேர் இறந்தனர். 6 ஆயிரம் பேர் காயமடைந்தனர். இந்நிலையில் அரசை எதிர்த்து ஏற்கனவே நடந்து வந்த போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்தன.