உலகம்

சவுதி அரேபியா மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல்

சவுதி அரேபியா மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல்

webteam

ஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் சவுதி அரேபியாவின் ரியாத் நகரை குறி வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அந்த ஏவுகணையை சவுதி விமானப் படையினர் இடைமறித்து தாக்கி அழித்ததால் உயிர் சேதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள யமாமா அரண்மனையை குறிவைத்து இந்த ஏவுகணையை செலுத்தியதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அந்த ஏவுகணை பறந்து சென்ற காட்சியையும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். இதற்கிடையே இந்த தாக்குதலுக்கு அமெரிக்காவுக்கான ஐ.நா. தூதர் நிக்கி ஹாலே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

ஈரானின் உதவியால் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இந்தத் தாக்குதலை நடத்தி இருப்பதாகவும், இதன் மூலம் பி‌ராந்திய போருக்கு ஈரான் மறைமுகமாக அழைப்பு விடுத்திருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கடந்த முறையும் சவுதியின் தலைநகரை குறிவைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குல் இடைமறித்து அழிக்கப்பட்டது. ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து இதுபோன்ற ஏவுகணை தாக்குதலில் ஈடுப்பட்டு வருவதாக உலக நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.