அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்களை சுட்டுக் கொல்வதற்கு முன்பு, கொலையாளி ஸ்டீஃபன் பட்டாக் தான் தங்கியிருந்த ஹோட்டலின் பாதுகாவலரையும் சுட்டுள்ள சம்பவம் தெரியவந்துள்ளது.
லாஸ் வேகாஸில் உள்ள மண்டாலே பே ஹோட்டலின் 32-வது மாடியில் இருந்தபடி, இசை நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தவர்கள் மீது ஸ்டீஃபன் பட்டாக் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 58 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணை தீவிரமடைந்திருக்கும் நிலையில், பட்டாக் தங்கி இருந்த அறையை எட்டிப் பார்த்த ஹோட்டலின் பாதுகாவலரையும் சுட்டுள்ளது தெரியவந்துள்ளது. காலில் காயமடைந்த அந்த பாதுகாவலருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.