ஒரு குண்டு ஊசியைக்கூட, டிமாண்ட் இருக்கக் கூடிய விற்கவேண்டிய இடத்தில் விற்பனைசெய்தால் பல மடங்கு அதிக விலைக்கு கூட விற்றுவிடலாம் வணிகவியலின் விதி.
”குண்டுமல்லி ரெண்டு ரூபாய் உன் கூந்தல் ஏறி உதிரும் பூ கோடி ரூபாய்....
பஞ்சுமிட்டாய் அஞ்சு ரூபாய் நீ பாதி தின்று தந்ததால் லட்ச ரூபாய்...” இது காதலன் பட பாட்டின் வரிகள்.
இதை கேட்கும் பொழுது, ரெண்டு ரூபாய் மல்லியை காதலன் கோடி ரூபாய்க்கு வாங்குவதும் 5 ரூபாய் பஞ்சுமிட்டாயை காதலி லட்ச ரூபாய்க்கு வாங்குவதும்.. காதல்வரிகளுக்கு மட்டும் இது சாத்தியம் இல்லை... உண்மையிலும் இது சாத்தியம் என்பதை நிரூபணம் ஆக்கியுள்ளது ஒரு லட்ச ரூபாய் செருப்பு... என்னது நாம் போடும் இந்த செருப்பு லட்ச ரூபாய்க்கு விற்குதா?..
நாம் போடுகின்ற சாதாரண ரப்பர் செருப்பு குவைத்தில் ஒரு லட்ச ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா?
சாதாரண ரப்பர் செருப்பிற்கா இத்தனை ரூபாய் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. அது என்ன செருப்பு என்பதை நீங்கள் அறிந்தால், உங்கள் செருப்பை எடுத்து பத்திரப்படுத்திக் கொள்வீர்கள்.
ஆம்... கிராமங்களில் இன்றும் நம் மக்கள் உபயோகப்படுத்தும் சாதாரண வார் வைத்த செருப்புதான் அது. இது குவைத்தில் 45,000 ரியால் அதாவது இந்திய மதிப்பில் ஒரு லட்ச ரூபாயாம். சிவப்பு, பச்சை, நீலம் என்ற பல வண்ணங்களில் இந்த செருப்பானது மிகவும் பாதுகாப்பாக கண்ணாடி பேழைக்குள் வைத்து விற்கப்படுகிறது என்ற செய்தி ஆச்சர்யமளிக்கிறது.
இந்தியாவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்களின் கட்டவிரல் நிலத்தில் தேயும் அளவிற்கு இது உழைக்கக்கூடியது.
இந்த வீடியோ இண்ஸ்டாவில் வைரலானது அடுத்து, பல பயனர்கள் அது குறித்து பல கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்தியர்கள் தற்போது இந்த வகை காலணிகளை கழிவறை செல்வதற்கே பயன்படுத்துவார்கள் என்று பலரும் பதிவிட்டுள்ளனர்.
ஆக... வசதிபடைத்தவர்கள் மதிப்பே இல்லாத பொருட்களை மதிப்புடையதாக்கிவிடுவார்கள் என்பதை தெரிந்துக்கொள்ளலாம். இப்போ இந்தியாவில் இந்த செருப்பு வைத்திருக்கும் ஒவ்வொருத்தரும் லட்சாதிபதிதான்.