உலகம்

கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ்: பி.வி.சிந்து, காஷ்யப் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ்: பி.வி.சிந்து, காஷ்யப் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

webteam

தென்கொரியாவில் நடைபெற்ற கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, காஷ்யப் ஆகியோர் 2வது சுற்றுக்‍கு முன்னேறியுள்ளனர்.

தென்கொரியாவின் சியோல் பகுதியில் கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, ஹாங்காங் வீராங்கனை சியங் நிகன் யி-ஐ எதிர்கொண்டார். இதில், 29 நிமிடங்களில் 21-க்‍கு 13, 21-க்‍கு 8 என்ற நேர்செட் கணக்‍கில் சியங் நிகனை வீழ்த்தி பி.பி. சிந்து 2 ஆம் சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில், பருபள்ளி காஷ்யப், சீன தைபே வீரர் ஹிசு ஜென் ஹாவ்-ஐ எதிர்கொண்டார். இதில் 35 நிமிடங்களில்  காஷ்யப் 21 - 13, 21 - 16 என்ற நேர்செட் கணக்‍கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.