உலகம்

`தாய் வழியிலேயே செயல்படுவேன்’- பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மூன்றாம் சார்லஸ் உறுதி

`தாய் வழியிலேயே செயல்படுவேன்’- பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மூன்றாம் சார்லஸ் உறுதி

நிவேதா ஜெகராஜா

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பதவியேற்றபின், மன்னராக முதல்முறையாக மூன்றாம் சார்லஸ் உரையாற்றியுள்ளார். 

அந்த உரையின்போது பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், தனது தாய் இரண்டாம் எலிசபெத் காட்டிச்சென்ற பாதையை பின்பற்றி செயல்பட உறுதியேற்றுள்ளதாக கூறியுள்ளார். பிரிட்டன் மன்னராக பதவியேற்ற பின்னர், மூன்றாம் சார்லஸ் முதல்முறையாக இப்போதுதான் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருக்கிறார். உரையின் தொடக்கத்துக்கு முன்பு, மறைந்த ராணியும் தனது தாயுமான இரண்டாம் எலிசபெத்துக்கு மன்னர் சார்லஸ் அஞ்சலி செலுத்தினார்.

பிரிட்டனில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்திற்கு மதிப்பளித்து செயல்பட உள்ளதாகவும் சார்லஸ் உறுதியளித்தார். ஜனநாயகம் சுவாசிக்கும் இடமாக நாடாளுமன்றம் விளங்குவதாகவும் தனது முதல் உரையில் அவர் புகழாரம் சூட்டினார். இதன் பின் இரு அவைகளின் சபாநாயகர்களும் ராணி எலிசபெத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேசினர்.

<iframe width="640" height="360" src="https://www.youtube.com/embed/SUVoQLDbiIo" title="பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மன்னர் சார்லஸ் முதல் உரை" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>