உலகம்

சிங்கப்பூரில் கிம்...!

சிங்கப்பூரில் கிம்...!

webteam

அமெ‌ரிக்க அதிபர் ட்ரம்ப் - வடகொரியா அதிபர் கிம் ஜா‌ங் உன் சந்திப்பு சிங்கப்பூரில் நாளை மறுநாள் காலை நடைபெற உள்ள நிலையில், சிங்கப்பூர் சென்றார் வடகொரியா அதிபர் கிம் ஜா‌ங் உன்.


 
அமெ‌ரிக்க அதிபர் ட்ரம்ப் - வடகொரியா அதிபர் கிம் ஜா‌ங் உன் இடையே நடக்கவுள்ள சந்திப்புக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திட்டமிட்டபடி இந்தச் சந்திப்பு நாளை மறுநாள் காலை 9 மணிக்கு சிங்கப்பூர் செண்டோசா தீவில் உள்ள கப்பெல்லா ஹோட்டலில் நடைபெறுகிறது. இந்நிலையில் பெரும் எதிர்பார்புகளுக்கு இடையே சிங்கப்பூர் சென்றடைந்தார் வடகொரியா அதிபர் கிம் ஜா‌ங் உன். இந்நிலையில், சிங்கப்பூர் வந்தடைந்த அதிபர் கிம்மை அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு தங்கள் நாட்டில் நிகழ்வது பெருமையளிப்பதாக சிங்கப்பூர் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

மேலும் ட்ரம்ப் - கிம் சந்திப்பு தொடர்பான செய்திகளை சேகரிக்க உலக நாடுகளில் இருந்து மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் சிங்கப்பூருக்கு வந்துள்ளனர். இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பில் கலந்து கொள்வதற்காக வந்த கிம் ஜாங் உன்னை பிரபல செயின்‌ட் ரீஜிஸ் ஹோட்டலில் தங்க வைக்கபட்டுள்ளார்.இதனால் அப்பகுதி முழுவதும் கண்காணிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சிங்கப்பூர் வந்த வடகொரியா அதிபர் கிம் ஜா‌ங் உன்னை சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை சந்தித்தார். ட்ரம்ப் - கிம்முடனான சந்திப்பு உலக நாடுகளிடையே மிகப்பெரிய அளவில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடதக்கது. மேலும் #TrumpKimSummit என்ற அஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.