உலகம்

ரோஹிங்யா இஸ்லாமியர்கள் படுகொலை: ஆங் சான் சூச்சிக்கு மலாலா கண்டனம்

webteam

மியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்படுவது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் தொடர்ந்து அமைதியாக இருந்து வரும் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், "கடந்த சில ஆண்டுகளாகவே ரோஹிங்யா இஸ்லாமியர் படுகொலை செய்யப்படுகிறார்கள். இது குறித்து கண்டனம் தெரிவித்து வருகிறேன். ஆங் சான் சூச்சி உடனடியாக ஏதாவது நடவடிக்கை எடுப்பார் எனக் காத்திருக்கிறேன். ரோஹிங்யா இஸ்லாமிய சமூகமும், உலக நாடுகளும் ஆங் சான் சூச்சியின் நடவடிக்கைக்காக காத்திருக்கின்றன" என தெரிவித்தார்.

இந்நிலையில், மியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து செசன்யாவில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். கிரோஸ்னி நகரின் பெரிய மசூதி அருகே கூடிய அவர்கள், ரோஹிங்யா இனத்தவருக்கு ஆதரவாகவும் மியான்மர் அரசுக்கு எதிராகவும் முழங்கங்களை எழுப்பினர். மியான்மரின் ராகினே பிராந்தியத்தில் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 400 இஸ்லாமியர் கொல்லப‌ட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சுமார் 90 ஆயிரம் பேர் வங்கதேசத்துக்குத் தப்பிச் ‌சென்றிருப்பதாகவும் மதிப்பிடப்படுகிறது.