உலகம்

"அமெரிக்கர்களை பாதுகாக்கவே சுலைமானியைக் கொன்றோம்" - தேர்தல் பரப்புரையில் ட்ரம்ப் பேச்சு

"அமெரிக்கர்களை பாதுகாக்கவே சுலைமானியைக் கொன்றோம்" - தேர்தல் பரப்புரையில் ட்ரம்ப் பேச்சு

webteam

ஈரான் உளவுப்பிரிவுத் தலைவர் காஸிம் சுலைமானி கொல்லப்பட்டதை தனது தேர்தல் பரப்புரையின் முக்கிய அம்சமாக டொனால்ட் ட்ரம்ப் பயன்படுத்த தொடங்கியுள்ளார்.

ஓஹியோவில் அதிபர் ட்ரம்ப் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, ஈரான் உளவுப்பிரிவுத் தலைவர் காஸிம் சுலைமானியை கொன்றதன் மூலம் அமெரிக்க நீதி நிலை நாட்டப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார். ‌‌நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் காஸிம் சுலைமானியை சுட்டுக் கொல்ல ஆணையிட்டது தொடர்பாக ட்ரம்ப் மீது ஜனநாயக கட்சியினர் பல்வேறு விமர்சனங்க‌ளை முன்வைத்து வைக்கின்றனர்.

ஆனால், இதனை தன்னுடைய தேர்தல் பரப்புரையின் முக்கிய அம்சமாக ட்ரம்ப் பயன்படுத்த தொடங்கிவிட்டார். அமெரிக்கர்களை பாதுகாப்பதற்காகவே சுலைமானியை கொல்லும் முடிவு எடுக்கப்பட்டதாக ட்ரம்ப் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கூறினார்.